AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கணவனை விட அதிக சம்பளம் வாங்கும் மனைவி ஜீவனாம்சம் கோர முடியாது.. கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவு!

Karnataka High Court Verdict | கணவன் - மனைவி விவாகரத்து பெறுபோது மனைவிக்கு, கணவன் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்படுவது நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், கணவனை விட மனைவி அதிக சம்பளம் வாங்கினால் ஜீவனாம்சம் கோர முடியாது என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

கணவனை விட அதிக சம்பளம் வாங்கும் மனைவி ஜீவனாம்சம் கோர முடியாது.. கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Jun 2026 23:36 PM IST

பெங்களூரு, ஜூன் 30 : கணவனை விட அதிக சம்பளம் வாங்கும் பெண்களுக்கு ஜீவனாம்சம் கிடையாது என்று கர்நாடகா (Karnataka) உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. மைசூரை சேர்ந்த தம்பதி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், ஜூவனாம்சம் கோரி மனைவி தாக்கல் செய்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கணவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கர்நாடகா நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து விரிவாக பார்க்கலாம்.

விவாகரத்துக்கு விண்ணப்பித்து ஜீவனாம்சம் கோரிய மனைவி

கர்நாடகா மாநிலம், மைசூரை சேர்ந்தவர்கள் ஜீவன் மற்றும் சஹானா தேவி தம்பதி. இருவருக்கும் 2024 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துள்ளனர். இந்த நிலையில், சஹானா தேவி விவகாரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதையும் படிங்க : ரூ.1-க்கு விற்பனை என வதந்தி.. வணிக வளாகம் முன்பு திரண்ட ஏராளமான மக்கள்.. மும்பையில் பரபரப்பு சம்பவம்!

அவரின் வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் அவரது மனைவிக்கு மாதம்தோறும் ரூ.20,000 இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஜீவன் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சில்லக்கூர் சுமலதா, இருவரின் வருமானத்தையும் ஒப்பிட்டு பார்த்துள்ளார்.

அதிக சம்பளம் வாங்குவதால் ஜீவனாம்சம் ரத்து

அப்போது கணவரை விட அவரது மனைவி அதிக சம்பளம் பெறுவது தெரிய வந்தது. அதாவது கணவர் மாதம் ரூ.60,646 வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், மனைவி மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்துள்ளார். அந்த பெண்ணுக்கு குழந்தைகள் இல்லாததால், அதற்கான நிதி சுமையும் இருக்காது என்பதை உணர்ந்த நீதிமன்றம்அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிங்க : இளம் பெண்ணை காருக்குள் வைத்து கத்தியால் குத்த முயன்ற நபர்.. அடுத்து நடந்த ஷாக் சம்பவம்.. பெங்களூரில் பரபரப்பு!

அதாவது, பொருளாதார ரீதியாக தன்னை தானே நிர்வகித்துக் கொள்ளும் திறன் கொண்ட பெண், தன்னை விட குறைவான வருமானம் ஈட்டும் கணவனை ஜீவனாம்சம் தருமாறு கட்டாயப்படுத்துவது நியாமற்றது என்று நீதிபதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us