AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவுக்கு முதலிடம்  – பிரதமர் பெருமிதம்

மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சார்ந்த வெற்றிகளைப் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்: 2026 ஆம் ஆண்டின் முதல் பாதி நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த ஆறு மாதங்களில், நமது குடிமக்களின் பல சாதனைகள் குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலும், நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் பல சாதனைகளை நம் குடிமக்கள் புரிந்துள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவுக்கு முதலிடம்  – பிரதமர் பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Jun 2026 14:40 PM IST

புதுடெல்லி, ஜூன் 28 : மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சார்ந்த வெற்றிகளைப் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்: 2026-ஆம் ஆண்டின் முதல் பாதி நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த ஆறு மாதங்களில், நமது குடிமக்களின் பல சாதனைகள் குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலும், நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் பல சாதனைகளை நம் குடிமக்கள் புரிந்துள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா படைத்த சாதனைகள்

பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தித் துறையில் இந்தியா அடைந்துள்ள சாதனைகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். மேலும் இந்த துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நாட்டின் பாதுகாப்பையும் தன்னிறைவையும் வலுப்படுத்த உதவியுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் C-295 ராணுவ சரக்கு போக்குவரத்து விமானம் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நீண்ட தூர தாக்குதல் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார். ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.

2026 ஆம் ஆண்டின் முதல் பாதி முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த ஆறு மாதங்களில், நமது நாட்டு மக்கள் செய்த பல சாதனைகள் குறித்து ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலும், நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் பல சாதனைகளை குடிமக்கள் புரிந்துள்ளனர். நாட்டின் பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு ஆகியவற்றுடன் இச்சாதனைகள் தொடர்புடையவை என்றும் பிரதமர் கூறினார்.

மேலும் பேசிய அவர், சமீபத்தில், கொல்கத்தாவில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு INS துனகிரி, INS சன்சோதக் மற்றும் INS அக்ரே ஆகிய 3 கடற்படைக் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இவை அனைத்தும் முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை.

C-295 விமானமும் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்த விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்தியா தற்போது இது போன்ற 40 விமானங்களைத் தயாரித்து வருகிறது. இந்த நடவடிக்கை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் விண்வெளித் துறைகளுக்கு ஊக்கமளிப்பதோடு, வேலைவாய்ப்பை அதிகரித்து, தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்கான உறுதியை வலுப்படுத்தும் என்றும் மோடி மேலும் கூறினார்.

‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நீண்ட தூர நிலப்பரப்புத் தாக்குதல் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை குறித்தும் பிரதமர் பேசினார். அவரது கருத்துக்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வரவேற்றது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நீண்ட தூர நிலப்பரப்புத் தாக்குதல் ஏவுகணையை DRDO வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. இந்த ஏவுகணை DRDO ஆய்வகங்கள் மற்றும் இந்தியத் தொழில் கூட்டாளிகளால் கூட்டாக உருவாக்கப்பட்டது. கடல் முதல் வானம் வரை அனைத்தையும் வெல்லும் வகையில் இந்தியா பாதுகாப்பானதாகவும் தன்னிறைவு பெற்றதாகவும் மாறி வருகிறது என்று மோடி கூறினார்.

இதற்கிடையில், ஜூன் 15 அன்று ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து நீண்ட தூர நிலப்பரப்புத் தாக்குதல் ஏவுகணையை DRDO சோதித்தது. சோதனையின் அனைத்து நோக்கங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகவும், சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் (Integrated Test Range) நிறுவப்பட்ட கண்காணிப்பு உபகரணங்களைப் பயன்படுத்தித் தரவுகள் சேகரிக்கப்பட்டதாகவும் DRDO தெரிவித்தது.

Follow Us