AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

தலைநகர் டெல்லியில் ஜூன் 27, 2026 இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது. ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 26, 2026 இன்று மாலை டெல்லி - என்சிஆர் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Jun 2026 20:48 PM IST

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜூன் 27, 2026 இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது. ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 26, 2026 இன்று மாலை டெல்லி – என்சிஆர் பகுதி மற்றும் ஜம்மு – காஷ்மீர் முழுவதும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும், ஜூன் 27, 2026 சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் டெல்லி – என்சிஆர் பகுதியில் வலுவான நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

டெல்லியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜம்மு – காஷ்மீர் மற்றும் டெல்லி – என்சிஆர் ஆகிய இரு பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகியுள்ளதை தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதிப்படுத்தியது. ஜம்மு-காஷ்மீர் மட்டுமின்றி டெல்லி-என்சிஆர், பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் நில அதிர்வுகள் பதிவானதை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியது. சமூக ஊடகங்களில் மக்கள் இதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், திடீரென ஏற்பட்ட இந்த நில அதிர்வுகளால் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியே அவசரமாக ஓடி வந்தனர்.

ஆரம்பகட்டத் தகவல்களின்படி, ஜூன் 27, 2026 இன்று மாலை ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மாலை 7:04 மணிக்கு 215 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் குறித்து வெளியான தகவல்

 

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கலாஃப்கானிலிருந்து சுமார் 81 கிலோமீட்டர் தொலைவில் உருவான நிலையில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, சீனா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

நில அதிர்வு ஆய்வாளர்கள் 6.2 அளவுள்ள நிலநடுக்கத்தை கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வலிமையான நிகழ்வாக வகைப்படுத்துகின்றனர். இருப்பினும், அதன் தாக்கத்தின் தீவிரமானது நிலநடுக்கம் ஏற்பட்ட ஆழம், அமைவிடம் மற்றும் உள்ளூர் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைப் பொறுத்து அமையும் என கூறப்படுகிறது.

Follow Us