AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குழந்தைக்கு பின்னால் ஒளிந்துகொண்டு…. அமைச்சர் பதவி விலக வேண்டும் – திமுக ஆர்பாட்டம் அறிவிப்பு

பொது இடத்தில் தவெக அமைச்சர் சரத் குமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் அமைச்சர் சரத் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக மாணவர் அணி மாவட்டத் தலைநகரங்களில் ஜூன் 29, 2026 நாளை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

குழந்தைக்கு பின்னால் ஒளிந்துகொண்டு…. அமைச்சர் பதவி விலக வேண்டும் – திமுக ஆர்பாட்டம் அறிவிப்பு
முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் சரத்குமார்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Jun 2026 15:59 PM IST

சென்னை, ஜூன் 28 : பொது இடத்தில் தவெக அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து இதுகுறித்து விளக்கமளித்த அவர் தனது குழந்தைக்காக மாத்திரியை பொடி செய்ததாகவும் எதிர்கட்சிகள் அவதூறு பரப்புவதாகவும் விளக்கமளித்தார். இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக மாணவர் அணி மாவட்டத் தலைநகரங்களில் ஜூன் 29, 2026 நாளை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

திமுக ஆர்பாட்டம் அறிவிப்பு

குழந்தைகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு அமைச்சர் சரத்குமார் அரசியல் செய்வதாக திமுக மாணவர் அணி தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், தி.மு.க. மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

இதையும் படிக்க : யார் இந்த பி.டி. அரசகுமார்? நர்சரி ஸ்கூலில் தொடங்கி ரூ.100 கோடி மோசடி வரை.. திடுக்கிடும் பின்னணி!

இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் தவெக அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

திமுகவின் பதிவு

 

அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் என்று, தவெகவின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை Thug Life Moment என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

இதையும் படிக்க : காங்கிரஸிலிருந்து விலகி திமுகவில் இணைகிறாரா செல்வப்பெருந்தகை? தமிழக அரசியலைக் உலுக்கும் அதிரடித் திருப்பம்!

எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமாரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, திமுக மாணவர் அணிச் சார்பில் ஜூன் 29, 2026 நாளை திமுக தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒன்றிய நர – பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us