ரூ.1-க்கு விற்பனை என வதந்தி.. வணிக வளாகம் முன்பு திரண்ட ஏராளமான மக்கள்.. மும்பையில் பரபரப்பு சம்பவம்!
Hundreds Of People Gathered In Front Of Shopping Complex | மும்பையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ரூ.1-க்கு விற்பனை என போலி தகவல் வெளியான நிலையில், ஏராளமான பொதுமக்கள் அந்த கடை முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை, ஜூன் 27 : மும்பையில் (Mumbai) உள்ள ஒரு வணிக வளாகத்தில் ரூ.1-க்கு விற்பனை என தகவல் வெளியான நிலையில், ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், வணிக வளாக விற்பனை தொடர்பாக ஏற்பட்ட குழப்பம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வணிக வளாகத்தில் ரூ.1-க்கு விற்பனை என வெளியான தகவல்
மகாராஷ்டிரா மாநிலம், மலாட் புறநகர் பகுதியில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் ரூ.1-க்கு விற்பனை என வதந்தி பரவியுள்ளது. இந்த நிலையில், தகவல் தீயாக பரவிய நிலையில், ஏராளமான பொதுமக்கள் இந்த வணிக வளாகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். ஆண், பெண் என சாரை சாரையாக கடை முன்பு குவிந்த பொதுமக்கள், பொருட்களை வாங்குவதற்காக தங்களது வாகனங்களை கடைக்கு முன்பு நிறுத்தி வைத்துவிட்டு காத்திருந்துள்ளனர்.
இதையும் படிங்க : தடுப்பூசி போட்ட 17 வயது மாணவி.. சில நிமிடங்களில் மயங்கி விழுந்து மரணம்.. துடிக்கும் பெற்றோர்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இவ்வாறு ஏராளமான மக்கள் அந்த வணிக வளாகத்தின் முன்பு குவிந்ததன் காரணமாக, அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வதந்தி பரவியதை போல அந்த வணிக வளாகத்தில் எந்த வித விற்பனையும் நடைபெறவில்லை என அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : 3 ஆண்டுகளில் போதைப்பொருள் நெட்வொர்க்கை முற்றிலுமாக ஒழிப்போம்… அமித் ஷா உறுதி!
போலீசார் கூறியதை கேட்டு ஏமாற்றத்திற்கு உள்ளான பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றுள்ளனர். பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு அந்த பகுதியில் மீண்டும் போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளது.