AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 அதிகரிப்பு

இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.13,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.1,07,200-க்கு விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.14,618 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,16,944 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 அதிகரிப்பு
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 02 Jul 2026 10:28 AM IST

சென்னை, ஜூலை 2, 2026: ஜூன் மாதம் முழுவதும் சரிவைக் கண்ட தங்கம் விலை, ஜூலை மாதம் தொடங்கியதிலிருந்து மீண்டும் உயர்வை சந்தித்து வருகிறது. ஜூலை 2-ஆம் தேதியான இன்று, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்துள்ளது. நேற்றைய தினமும் ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை மொத்தம் ரூ.1,600 வரை உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:

இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.13,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.1,07,200-க்கு விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.14,618 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,16,944 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத தொடக்கத்தில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15,000-ஐ நெருங்கிய நிலையில் விற்பனையானது. பின்னர் தொடர்ந்து விலை குறைந்து, தற்போது ரூ.13,400 என்ற நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும், ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க: தொடர் சரிவில் தங்கம் விலை.. காரணம் என்ன?.. மேலும் விலை குறையுமா?

வெள்ளி விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,50,000 ஆக உள்ளது.

விலை ஏற்ற இறக்கத்திற்கு என்ன காரணம்?

சர்வதேச பொருளாதார நிலைமையில் நீடிக்கும் நிச்சயமற்ற சூழல், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், வரும் நாட்களில் தங்கம் விலையில் மீண்டும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் தங்கம் விலை குறைந்திருப்பதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Follow Us