ஆதாரில் இலவசமாக Email Id-ஐ மாற்றம் செய்யலாம்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. என்ன?
Free E Mail Address Update In Aadhaar Card | ஆதார் கார்டில் உள்ள விவரங்களை மாற்றம் செய்ய வேண்டும் அல்லது அப்டேட் செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், மின்னஞ்சல் முகவரியை மாற்றம் செய்ய இலவச சேவை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. காரணம், ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் பணியில் சேறுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லை என்றால் பல்வேறு சேவைகளை பெற முடியாத சூழல் தான் தற்போது நிலவி வருகிறது. இத்தகைய மிக முக்கிய ஆவணமாக உள்ள நிலையில், அதில் இருக்கும் விவரங்கள் அனைத்தும் துல்லியமாகவும், செயல்பாட்டில் இருக்கக்கூடியவையாகவும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டு குறித்த முக்கிய அம்சம் இன்று (ஜூலை 01, 2026) முதல் அமலுக்கு வந்துள்ளது.
மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம்
ஜூலை 01, 2026 முதல் ஆதார் கார்டில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority Of India) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இனி பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் மன்னிஞ்சல் முகவரியை புதுப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்க ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இருந்த நிலையில், தற்போது அது முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : EPFO : பிஎஃப் பணத்தை எடுக்க தனி ஏடிஎம் கார்டு?.. ஆனால் இவையெல்லாம் கட்டாயம்!




அடுத்த 6 மாதங்களுக்கு இந்த இலவச சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்
இந்த இலவச சேவையை புதியதாக மேம்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலம் ஆன்லைனில் மூலம் புதுப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒருவேளை நேரடியாக ஆதார் மையங்களுக்கு சென்று மின்னஞ்சல் முகவரியை மாற்றம் செய்கிறீர்கள் என்றால் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். இன்று (ஜூலை 01, 2026) முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய அம்சத்தின் மூலம் அடுத்த 6 மாதங்களுக்கு பொதுமக்கள் இலவசமாக மின்னஞ்சல் முகவரியை மாற்றம் செய்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : ஜூலை முதல் ரூ.10, ரூ.20, ரூ.50 உள்ளிட்ட நோட்டுக்கள் செல்லாதா?.. இணையத்தில் பரவும் தகவல்.. உண்மை என்ன?
இந்த செயலியை பொதுமக்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஆடோரை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து, கைபேசி எண்ணை உள்ளிட்டு, ஓடிபி சரிபார்ப்பு முடிந்த பிறகு முக அங்கீகாரத்தை நிறைவு செய்து பயன்படுத்த தொடங்கலாம்.