EPFO : இபிஎஃப்ஓ இணையதளம் எப்போது முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.. வெளியான முக்கிய தகவல்!
When Will EPFO Website Services Resumes | இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான மிக முக்கிய திட்டமாக இபிஎஃப்ஓ உள்ளது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ 3.0 அறிமுகத்திற்காக இபிஎஃப்ஓ இணையதளம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அது எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர்கள் மிக எளிதாகவும், விரைவாகவும் பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் பட்சத்தில் இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தை அறிமுகம் செய்ய ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இபிஎஃப்ஓ தனது இணையதளத்தை மேம்படுத்தி வரும் நிலையில், இணையதள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக எப்போது இணையதளம் வழக்கம் போல செயல்படும் என பயனர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விரைவில் அமலுக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0 அம்சம்
தற்போதைய நிலவரப்படி ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இருந்து பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால், பயனர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. பெரும்பாலானவர்கள் பிஎஃப் பணத்தையே தங்களது முதன்மை சேமிப்பாக நம்பியுள்ளனர். இதன் காரணமாக பிஎஃப் பணத்தை எடுக்க சில நாட்கள் ஆகும் நிலையில், அவர்களால் அவசர தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே தான், பயனர்கள் ஒருசில நிமிடங்களில் ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மற்றும் யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க : வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?
இபிஎஃப்ஓ இணையதளம் எப்போது செயல்பாட்டுக்கு வரும்?
இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, இணையதளத்தை மேம்படுத்தும் பணிகளில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் இறங்கியது. முன்னதாக ஜூன் 26, 2026 முதல் ஜூன் 28, 2026 வரையிலான மூன்று நாட்கள் இபிஎஃப்ஓ இணையதளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்னும் இபிஎஃப்ஓ இணையதளம் பயன்பாட்டுக்கு வராததன் காரணமாக பயனர்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : மத்திய அரசின் சேமிப்பு திட்டங்கள் – வட்டி விகிதத்தில் மாற்றம்? வெளியான தகவல்
இந்த நிலையில் தான் ஜூலை 02, 2026 வரை இபிஎஃப்ஓ இணையதளம் செயல்படாது என்றும், அதன் பிறகு பயனர்கள் வழக்கம் போல இணையதளத்தை பயன்படுத்தி சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


