AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : தொடர் சரிவில் தங்கம் விலை.. காரணம் என்ன?.. மேலும் விலை குறையுமா?

Why Gold Price Falling Continuously | ஈரான் போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆனால், ஜூன் மாதம் தொடங்கியது முதல் தங்கம் சரிவை சந்திக்க தொடங்கியது. அதன் காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Gold Price : தொடர் சரிவில் தங்கம் விலை.. காரணம் என்ன?.. மேலும் விலை குறையுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Jul 2026 19:59 PM IST

2026, பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா (America) மற்றும் ஈரான் (Iran) இடையே மிக கடுமையான போர் நிலவி வந்தது. இந்த போரின் காரணமாக கடந்த சில மாதங்களாக தங்கம் விலை (Gold Price) மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. ஆனால், ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை கடும் சரிவை காண தொடங்கியது. அவ்வாறு தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம் தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் விலை குறைய காரணம் என்ன, இனி வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.15,000-ல் இருந்து ரூ.13,000-க்கு வந்த தங்கம் விலை

ஈரான் போரின் போது ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதன் காரணமாக உலக நாடுகளுக்கு செல்லும் எண்ணெய் கப்பல்கள் தடைபட்டு நின்றன. அதன் விளைவாக கச்சா எண்ணெய் பல மடங்கு உயர்வை சந்தித்த நிலையில், உலக நாடுகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை எதிர்க்கொண்டன. இதன் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனவரி மாதத்தில் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : இரண்டு மடங்கு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. இத தெரிஞ்சுக்கோங்க!

அமெரிக்காவில் வலுவான பொருளாதரம் மிகப்பெரிய காரணம்

வழக்கமாக சரவதேச அளவில் ஏதேனும் போர் நடைபெறும்போது தங்கம் விலை உயர்வை அடைய செய்யும். ஆனால், ஈரான் போரில் அது தலைகீழாக நடைபெற்றுள்ளது. அதற்கு காரணம், அமெரிக்காவின் வலுவான பொருளாதாரம் ஆகும். இந்த தரவுகள் அமெரிக்க பொருளாதாரம் மீண்டு வருவதை காட்டுவதால், அந்த நாட்டின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : EPFO : பிஎஃப் பணத்தை எடுக்க தனி ஏடிஎம் கார்டு?.. ஆனால் இவையெல்லாம் கட்டாயம்!

இதன் காரணமாக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது இருந்து திரும்பியுள்ளது. இதன் காரணமாக தான் தங்கம் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

Follow Us