ஒடிசாவில் 5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராய் பாடல்.. வெடித்த சர்ச்சை!
Hindi Movie Song Took Place In 5th Standard Text Book | ஒடிசாவில் 5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த திரைப்படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விசாரணை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.
புவனேஷ்வர், ஜூலை 02 : ஒடிசா (Odisha) மாநிலத்தில் 5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த இந்தி பாடல் இடம்பெற்றுள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தங்களில் ஏராளமான பிழைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.
5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாடல்
ஒடிசா மாநிலத்தில், சமீபத்தில் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அந்த பாடப்புத்தகத்தில், 1999 அம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த “ஹம் தில் தே சுஜே சுனம்” என்ற திரைப்படத்தில் வரும் “நிம்புடா நிம்புடா” பாடல் இடம்பெற்றுள்ளது. திரைப்படத்தின் பாடல் மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் மிக வேகமாக வைரலாக தொடங்கிய நிலையில், அது குறித்து கடும் கண்டனம் எழுந்தது.
இதையும் படிங்க : எரிபொருள் மீதான தற்காலிக கட்டுப்பாடுகள் நீக்கம்.. மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் முடிவு – மத்திய அமைச்சர் அறிவிப்பு




திரைப்பட பாடல் குறித்து கேள்வி எழுப்பும் கல்வியாளர்கள்
நிம்புடா நிம்புடா என தொடங்கும் அந்த பாடல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், மாணவர்களின் பாடப்புத்தக்கத்தில் சினிமா பாடல் இடம்பெற்றிருப்பது ஏன் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாடப்புத்தகங்களை அச்சிடும்போது தவறுதலாக அந்த பாடல் அச்சிடப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, ஒடிசா மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் பாடப்புத்தகங்களில் சுமார் 1,600-க்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 220 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்.. ராணுவத்தின் 21 மணி நேரப் போராட்டம்.. காத்திருந்த அதிர்ச்சி!!
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று ஒடிசா மாநில பள்ளி மற்றும் மக்கள் கல்வித்துறை அமைச்சர் நித்யானந்த் கோண்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.