சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
சிவகாசி அருகே கோப்பைநாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஜூலை 2, 2026 இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர. தற்போது வரை 2 பேர் படுகாயம் என கூறப்படுகிறது. இந்த தகவல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர், ஜூலை 2 : சிவகாசி அருகே கோப்பைநாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஜூலை 2, 2026 இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர. தற்போது வரை 2 பேர் படுகாயம் என கூறப்படுகிறது. பணியாளர்களின் அலறல் சத்தம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து
இந்த வெடி விபத்தின் தாக்கம் காரணமாக ஆலை வளாகத்தில் இருந்த 4க்கும் மேற்பட்ட பஅறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியதாக கூறப்படுகிறது. விபத்து குறித்த தகவல் அறிந்த சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆலைக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துக் கொண்டே இருந்ததால், உடனடியாகத் தீயைக் கட்டுப்படுத்துவதில் மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவால்கள் ஏற்பட்டன. எனினும், தீயணைப்பு வீரர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது, பல மணி நேரம் போராடித் தீயை ஓரளவிற்குக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.