Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விமான விபத்து ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு – நடிகர் ரஜினிகாந்த்

Super Star Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படப்பிடிப்பு பணிக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் சமிபத்தில் நடந்த விமான விபத்து குறித்து பேசினார்.

விமான விபத்து ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு – நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 17 Jun 2025 11:57 AM

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் (Actor Super Star Rajinikanth) நடிப்பில் அடுத்ததாக கூலி படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில் தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணியில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று 17-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு காலை ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அப்போது அவரிடம் கூலி படம் மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முன்பே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திடம் அகமதாபாத்தில் நடைப்பெற்ற கோர விமான விபத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் விமான விபத்து ரொம்ப ரொம்ப வருத்தத்தை கொடுத்தது. ஆண்டவன் அருளால் இனிமேல் இதுமாதிரி நடக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் ரஜினியின் கூலி:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் பான் இந்திய நட்சத்திரங்களான நாகர்ஜுனா, அமீர் கான், சௌபின் ஷாகிர், உபேந்திரா ராவ், ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்துள்ள நிலையில் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பேனரின் கீழ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படம் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

கூலி படக்குழு வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ: