Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

குபேரா, டிஎன்ஏ, சென்னை சிட்டி கேங்ஸ்டர்… எந்தப் படத்தை முதலில் பாக்க போறீங்க?

Theatre Release Movies: கோலிவுட் சினிமாவில் ஜூன் மாதம் தொடக்கத்தில் நடிகர் கமல் ஹாசனின் தக் லைஃப் படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் என பெரிய படங்களும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

குபேரா, டிஎன்ஏ, சென்னை சிட்டி கேங்ஸ்டர்… எந்தப் படத்தை முதலில் பாக்க போறீங்க?
குபேரா, டிஎன்ஏ, சென்னை சிட்டி கேங்ஸ்டர்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 18 Jun 2025 18:27 PM

2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே கோலிவுட் சினிமாவில் (Kollywood Cinema) முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வரிசையாக வெளியாகி வருகின்றது. இதுவரை அஜித் குமார் (Ajith Kumar), சூர்யா, கமல் ஹாசன், சிலம்பரசன் என கோலிவுட் சினிமாவின் உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர்கள் தனுஷ், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதில் இந்த வாரம் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்துடன் கோலிவுட் சினிமாவில் நடிகர் அதர்வாவின் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படம் மற்றும் நடிகர் வைபவின் நடிப்பில் உருவாகியுள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர் ஆகிய படங்களும் வெளியாக உள்ளது.

வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் மட்டும் 3 நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ள நிலையில் படம் வெளியான பிறகே எந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகமாக உள்ளது என்பது குறித்து தெரியவரும்.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படம்:

நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள 51-வது படம் குபேரா. இந்தப் படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி உள்ள நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

குபேரா படத்தின் ட்ரெய்லர்:

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படம்:

நடிகர் அதர்வா நாயகனாக நடித்துள்ள படம் டிஎன்ஏ. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ள நிலையில் நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா கே.பி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிஎன்ஏ படத்தின் ட்ரெய்லர்:

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்:

நடிகர் வைபவ் நாயகனாக நடித்துள்ள படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர். இந்தப் படத்தை இயக்குநர்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். நடிகை அதுல்யா ரவி நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மணிகண்டன் ராஜேஷ், ஆனந்தராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

சென்னை சிட்டி கேங்ஸ்டர் படத்தின் ட்ரெய்லர்:

அனிருத்தின் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரீட்
அனிருத்தின் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரீட்...
வீக் எண்டுக்கு ஊருக்கு போற பிளானா? சிறப்பு பேருந்து இயக்கம்
வீக் எண்டுக்கு ஊருக்கு போற பிளானா? சிறப்பு பேருந்து இயக்கம்...
மேற்கு வங்கத்தில் கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீர்
மேற்கு வங்கத்தில் கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீர்...
சாலையோரத்தில் கிடந்த மர்ம பொருள்.. ராஜஸ்தானில் பரபரப்பு
சாலையோரத்தில் கிடந்த மர்ம பொருள்.. ராஜஸ்தானில் பரபரப்பு...
லேப்டாப்பை யூஸ் செய்யும் பெண்களா நீங்கள்..? இந்த பிரச்சனை வரலாம்!
லேப்டாப்பை யூஸ் செய்யும் பெண்களா நீங்கள்..? இந்த பிரச்சனை வரலாம்!...
போன் செய்யும்போது நெட்டை ஆனில் வைத்திருக்கிறீர்களா?
போன் செய்யும்போது நெட்டை ஆனில் வைத்திருக்கிறீர்களா?...
திமுக கூட்டணியில் ஓட்டையா? புதிய புயலை கிளப்பிய வைகை செல்வன்
திமுக கூட்டணியில் ஓட்டையா? புதிய புயலை கிளப்பிய வைகை செல்வன்...
சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.. உயர்நீதிமன்றம்..
சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.. உயர்நீதிமன்றம்.....
சிஎஸ்கே வெளியிடும் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஆவணப்படம்!
சிஎஸ்கே வெளியிடும் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஆவணப்படம்!...
மந்திர ஒலிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த குரோஷியா
மந்திர ஒலிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த குரோஷியா...
6 இடத்தில் சதம் அடித்த வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலை..
6 இடத்தில் சதம் அடித்த வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலை.....