AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

DC: ரத்தம் தெறிக்க தெறிக்க.. வெளியானது லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ படத்தின் ரிலீஸ் ட்ரெயிலர்..!

DC Movie Release Trailer Out: லோகேஷ் கனகராஜின் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி திரைப்படம்தான் டிசி. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் முதல் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது.

DC: ரத்தம் தெறிக்க தெறிக்க.. வெளியானது லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ படத்தின் ரிலீஸ் ட்ரெயிலர்..!
டிசி படத்தின் ரிலீஸ் ட்ரெயிலர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Jul 2026 19:30 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி மிகவும் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) . இவர் தளபதி விஜய் (CM Vijay) முதல் ரஜினிகாந்த (Rajinikanth) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பிரபலங்களுடன் இணைந்து படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி (Coolie) திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் இவர் ஹீரோவாக நடித்துவந்த திரைப்படம்தான் டிசி (DC). இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் (Arun Matheshwaran) இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் கலாநிதிமாறன் தயாரித்துள்ளார்.

ஆரம்பத்தில் ஜூலை 31ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜன நாயகன் பட வெளியீட்டின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 07ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு இன்று (31/07/2026) இதன் ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹேங் ஓவர் மாதிரி ஒரு ஜாலியான படம் பார்க்கணுமா? வைரலாகும் இந்த 72 ஹவர்ஸ் படத்தை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்

லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படத்தின் ட்ரெயிலர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

டிசி திரைப்படத்தின் டிசி பட ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இந்த டிசி திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் தேவதாஸ் என்ற வேடத்திலும், வாமிகா கபி சந்திரா என்ற வேடத்திலும் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பார்வதி என்ற வேடத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியான நிலக்கியில், தற்போது ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சூதாட்டம் கதைக்களத்தில்.. வெளியானது துல்கர் சல்மானின் ‘ஐஅம் கேம்’ பட ட்ரெய்லர்!

இந்த ட்ரெய்லர் முழுக்க ஆக்ஷன் அதிரடி கதைக்களத்தில் அமைந்துள்ளது. இதில் லோகேஷ் கனகராஜ் மற்றும் வாமிகா கபி இருவருமே அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது வெளியான இந்த ட்ரெய்லர் இணையத்தில் ரசிகர்கள் வைரலாகிவருகிறது.

டிசி திரைப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:

இந்த படமானது முழுக்க ரத்தம் தெறிக்க, வன்முறைகள் அதிகம் கொண்ட பி[பாடமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அதிகம் கெட்டவார்த்தைகள் மற்றும் கொலை காட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில், சென்சார் குழு “ஏ” தரச் சான்றிதழை வழங்கியுள்ளது. அதனால் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் சென்று பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us