AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹேங் ஓவர் மாதிரி ஒரு ஜாலியான படம் பார்க்கணுமா? வைரலாகும் இந்த 72 ஹவர்ஸ் படத்தை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்

2 Hours movie ott update | மற்ற மொழிப் படங்களை தமிழ் மொழியில் டப் செய்து வெளியாகி வருவது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் ஆங்கில மொழியில் உருவாகி தமிழ் மொழியில் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வரும் படம் 72 ஹவர்ஸ். இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்று பார்ப்போம்.

ஹேங் ஓவர் மாதிரி ஒரு ஜாலியான படம் பார்க்கணுமா? வைரலாகும் இந்த 72 ஹவர்ஸ் படத்தை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்
72 ஹவர்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jul 2026 18:37 PM IST

ஓடிடியை பொருத்தவரை ரசிகர்கள் தங்களின் மொழிகளை தவிற மற்ற மொழிகளில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். மற்ற மொழிப் படங்களை அந்த மொழியிலேயே சப்டைட்டில் உடன் பார்ப்பவர்களைவிட தங்களது தாய் மொழியில் டப் செய்த படங்களை பார்ப்பவர்கள் அதிகம் என்று சொல்லலாம். அதிலும் குறிப்பாக காமெடிப் படங்களை தங்களது மொழிக்கு ஏற்றார் போல டப் செய்த படங்களை ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் ஆங்கிலத்தில் முன்னதாக வெளியான ஹேங்கோவர் படத்தினை தமிழில் சில நண்பர்கள் இணைந்து காமெடியாக டப் செய்து வெளியிட்டது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வரிசையில் தற்போது ஆங்கிலத்தில் வெளியான 72 ஹவர்ஸ் என்ற படத்தின் தமிழ் டப்பிங் ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

72 ஹவர்ஸ் என்ற இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் டிம் ஸ்டோரி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் கெவின் ஹார்ட், மார்செல்லோ ஹெர்னாண்டஸ், மேசன் குடிங், காம் பேட்டர்சன், பென் மார்ஷல், சாக் செர்ரி, மைக்கேல் மண்டோ, தியானா டெய்லர், கெவின் டன், அன்னா கார்சியா, எலிஸி சான்வில்லே, ஜீனா குயின்டோஸ், மேகன் சூரி, ஆண்டி கார்சியா, பிராண்டன் டயல், எமி கியூம், அமேனா, அவா ஐசன்சன், காட் வில்லியம்ஸ் மற்றும் மைக் எப்ஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர்.

Also Read… கேரளாவில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

72 ஹவர்ஸ் படத்தின் கதை என்ன தெரியுமா?

இந்தப் படத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு விளம்பர பட தயாரிப்பாளரான ஜோ என்பவரை ஜென்சி இளைஞர்கள் தவறுதலாக தங்களது பேச்சுளர் பார்ட்டி வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்துவிடுவார்கள். ஜோ தனது வேலையில் சில பிரச்சனைகளை சந்திக்கும் போது ஜென்சி இளைஞர்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக அந்த இளைஞர்களுடன் சென்று பார்ட்டி செய்ய முடிவு செய்கிறார். அவரே பணத்தை செலவு செய்து அந்த யாரென்றே தெரியாத 4 இளைஞர்களுடன் ஜாலியாக பார்ட்டி செய்ய போகிறார். அங்கு இவர்கள் அனைவரும் சேர்ந்து என்ன எல்லாம் செய்கிறார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை. ஹேங்கோவர் மாதிரி மிகவும் ஜாலியான இந்தப் படம் தமிழ் டப்பிங்கிளும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. இது தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவானார் நடிகர் கவின் – குவியும் வாழ்த்து

Follow Us