IND vs SA ODI Series: கில்லுக்கு குணமடையாத காரணம்! SA-க்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணிக்கு புதிய கேப்டன்!
Rishabh Pant: சுப்மன் கில் காயம் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராக இருக்குமாறு ரிஷப் பண்ட்டிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் சுப்மன் கில் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. எனவே, ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவது கடினம் என்று கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணி காயத்தால் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக, ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) உள்ளிட்ட அனுபவ வீரர்கள் உள்ளேயும் வெளியேயும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். இதற்கிடையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணிக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. இந்திய கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் கேள்வியாக உள்ளது. இந்தநிலையில், சுப்மன் கில் அப்டேட் பற்றிய விவரம் நாளை அதாவது 2025 நவம்பர் 21ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை சுப்மன் கில் விளையாடாத நேரத்தில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்ட்டிடம் ஒப்படைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
ALSO READ: 2வது டெஸ்டில் இருந்து வெளியேறும் சுப்மன் கில் – அவருக்கு பதிலாக களமிறங்கப்போவது யார் தெரியுமா?




இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக ரிஷப் பண்ட்..?
🚨 RISHABH PANT AS ODI CAPTAIN 🚨
Rishabh Pant Likely to Lead Team India in ODI Series vs South Africa [TOI] pic.twitter.com/PWCohg0zLp
— Cricket Central (@ramesh__yadav01) November 19, 2025
சுப்மன் கில் காயம் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராக இருக்குமாறு ரிஷப் பண்ட்டிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் சுப்மன் கில் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. எனவே, ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவது கடினம் என்று கூறப்படுகிறது. ரோஹித் சர்மாவிற்கு பிறகு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்பு சுப்மன் கில்லிடம் இந்திய அணியின் கேப்டன் பதவி ஒப்படைக்கப்பட்டது. அதேநேரத்தில், இந்திய அணியின் ஒருநாள் துணை கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக சிகிச்சையில் உள்ளார். இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலையில் இந்திய அணியின் புதிய ஒருநாள் கேப்டனாக ஒரு வீரர் தேவை.
ரெவ்ஸ்போர்ட் அறிக்கையின்படி, சுப்மன் கில்லுக்கு இன்னும் காயம் சரியில்லாமல் ஓய்வில் உள்ளார். குவுஹாத்தி டெஸ்டில் விளையாட முடிவு எடுத்தால், நிலைமை இன்னும் மோசமடையலாம். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கில்லின் கழுத்து காயத்திலிருந்து மீள 5 முதல் 7 நாட்கள் ஆகும்.
எனவே, சுப்மன் கில் விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இந்திய அணிக்காக 2வது டெஸ்ட் போட்டியில் கில் விளையாடவில்லை என்றால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் சுப்மன் கில் தவறவிட வாய்ப்புள்ளது. ஏனெனில், கில் தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடுவதால் காயம் ஏற்படுவதாக விளையாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.
ALSO READ: விளையாட விருப்பம்.. அணியுடன் விமானத்தில் பயணித்த கில்! பிசிசிஐ மருத்துவக்குழு கூறுவது என்ன?
ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவாரா..?
சும்பன் கில் விளையாடாத பட்சத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் வழிநடத்த வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் காயமடைந்தார். இதன் காரணமாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஷ்ரேயாஸ் இழக்க நேரிடும். ரிஷப் பண்ட்க்கு கேப்டன் பதவி வழங்கப்படவில்லை என்றால் மறுபுறம், கே.எல். ராகுல் ஒருநாள் கேப்டன் பதவி வழங்க வாய்ப்புள்ளது. எனவே, விளையாட்டு ரசிகர்களின் கண்கள் பிசிசிஐ தேர்வுக் குழுவில் உள்ளன. ஒருநாள் தொடருக்கு முன்பு கில் குணமடைவாரா இல்லையா? ஒருநாள் தொடரில் இடம் பெறுவரா? இது போன்ற கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும்.