Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ind vs SA : 2வது டெஸ்டில் இருந்து வெளியேறும் சுப்மன் கில் – அவருக்கு பதிலாக களமிறங்கப்போவது யார் தெரியுமா?

Sai Sudharsan Replaces Gill : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லின் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பாதியில் விலகினார். இந்த நிலையில் அவர் 2வது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

Ind vs SA : 2வது டெஸ்டில் இருந்து வெளியேறும் சுப்மன் கில் – அவருக்கு பதிலாக களமிறங்கப்போவது யார் தெரியுமா?
சுப்மன் கில்
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Nov 2025 22:41 PM IST

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் (Test Match) போது கழுத்தில் ஏற்பட்ட  காயம் காரணமாக, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,(Shubman Gill) கவுஹாத்தியில்  நடைபெறவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில், இரண்டாம் இன்னிங்ஸில் கில் களமிறங்கவில்லை. இந்தியா 124 ரன்கள் இலக்கை துரத்தும் போது அவர் இல்லாதது அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இறுதியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என்ற தகவல் ரசிர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சுப்மன் கில்லுக்கு பதிலாக களமிறங்கப்போவது யார்?

சுப்மன் கில் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில்,  அவரது இடத்தில் 24 வயது இளம் பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் இரண்டாவது டெஸ்டில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அணியின் இறுதிப்பட்டியலிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.  சாய் சுதர்சன் இங்கிலாந்தில் கடந்த ஜூன், 2025ன் போது நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5 டெஸ்டுகளில் விளையாடியுள்ள அவர், 273 ரன்கள் எடுத்து, 30.33 என்ற சராசரியை வைத்துள்ளார்.

இதையும் படிக்க : Shubman Gill: கில்லின் காயம்.. குவஹாத்தி டெஸ்ட் போட்டியை மிஸ் செய்வாரா?

கடைசியாக கடந்த அக்டோபர் 2025 மாதம் மேற்கிந்திய அணிக்கு எதிராக களமிறங்கிய அவர், முறையே 39 மற்றும் 87 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா தொடருக்கான அணியில் உள்ள அவர், முதல் டெஸ்டில் இடம் பெறவில்லை. ஆனால் சுப்மன் கில்லின் காயம் காரணமாக 11 பேர் கொண்ட அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். அவரது வருகை அணிக்கு எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதையும் படிக்க : IND vs SA 2nd Test: இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்.. அதிரடியாக மாற்றப்பட்ட போட்டி நேரம்! ஏன் தெரியுமா?

சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி

முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் கழுத்து  பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, சுப்மன் கில் கொல்கத்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், முழுமையாக குணமாக குறைந்தது 10 நாட்கள் ஓய்வு அவசியம் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். கவுஹாத்தி சென்றபோது கில் கழுத்து பட்டை அணியவில்லை என்றாலும், தொடர்ச்சியாக 5 நாட்கள் டெஸ்ட்டுக்கு தேவையான உடல் தகுதி இருக்காது என அணியின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் 2வது டெஸ்டில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் அந்த இடத்தை நிரப்பவுள்ளார்.