IND W vs BAN W: வங்கதேச தொடரை ரத்து செய்த பிசிசிஐ.. தள்ளிப்போன இந்திய மகளிர் அணியின் அட்டவணை!
Indian Women’s Team Schedule: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக வருகின்ற 2025 டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த வங்கதேச மகளிர் அணியின் இந்திய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து (BCCI) ஒரு கடிதம் பறந்தது.
2025 மகளிர் உலகக் கோப்பை சாம்பியனான இந்திய மகளிர் அணி தற்போது ஓய்வில் உள்ளது. இந்த ஓய்வுக்குபிறகு, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வருகின்ற 2025 டிசம்பர் மாதம் மீண்டும் கிரிக்கெட் களத்தில் களமிறங்கவிருந்தது. இருப்பினும், இது தொடர்பாக தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. அதன்படி, இந்திய மகளிர் அணியின் (Indian Womens Cricket Team) வரவிருக்கும் தொடரை பிசிசிஐ (BCCI) ரத்து செய்துள்ளது. இது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, இந்திய மகளிர் அணி மீண்டும் களத்தில் இறங்குவதை காண இந்திய ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த முடிவைத் தெரிவித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளது.
ALSO READ: ஸ்மிருதி மந்தனாவுக்கு டும்! டும்! டும்! எப்போது..? எங்கு தெரியுமா..? வெளியான அப்டேட்!
வங்கதேசத்தின் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது பிசிசிஐ:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக வருகின்ற 2025 டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த வங்கதேச மகளிர் அணியின் இந்திய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து (BCCI) ஒரு கடிதம் வந்துள்ளதாகவும், அதில், சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டதாகவும் தெரிவித்தார்.




அரசியல் குழப்பம் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு:
இந்திய மகளிர் – வங்கதேச மகளிர் அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரானது, 2026 மகளிர் பிரீமியர் லீக்கிற்கு முன்பு இந்தியாவின் கடைசி டி20 தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில், இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான மகளிர் ஒருநாள் தொடர் 2025 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு நடைபெறும் முதல் தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இருப்பினும், ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ALSO READ: இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்டில் சிக்கல்.. மேலும் 3 வீரர்கள் மருத்துவமனை அனுமதி..!
ஆண்கள் அணியின் சுற்றுப்பயணமும் ரத்து:
முன்னதாக, இந்திய ஆண்கள் அணியின் வங்கதேச சுற்றுப்பயணத்தையும் பிசிசிஐ ரத்து செய்திருந்தது. கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் இரு அணிகளும் இடையிலான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பரஸ்பர ஒப்புதலுடன் இந்த முடிவை எடுத்தன. இந்த சுற்றுப்பயணம் 2025 ஆண்டு முழுவதும் ரத்து செய்யப்பட்டு வருகின்ற 2026 செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.