IND vs SA: 6 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா.. குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அபாரம்.. யார் ஆதிக்கம்?
India vs South Africa 2nd Test Day 1: தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான தொடக்கத்தை அளித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஐடன் மார்க்கரம் மற்றும் ரியான் ரிக்கல்டன் அரைசத பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஐடன் மார்க்கரம் 38 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டமிழக்க செய்தார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 2 போட்டிகள் (India vs South Africa) கொண்ட தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று அதாவது 2025 நவம்பர் 22ம் தேதி குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லுக்கு (Shubman Gill) கழுத்தில் காயம் ஏற்பட்டதன் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதன்காரணமாக, இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் களமிறங்கியுள்ளார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்துள்ளது. செனுரான் முத்துசாமி 25 ரன்களுடனும், கைல் வெர்ரெய்ன் 1 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்தியாவுக்காக குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ALSO READ: ரோஹித், கோலி ரீ-என்ட்ரி.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி எப்படி?




தென்னாப்பிரிக்கா அணி முதல் பேட்டிங்:
Stumps on Day 1!
An absorbing day’s play comes to an end! 🙌
3⃣ wickets for Kuldeep Yadav
1⃣ wicket each for Jasprit Bumrah, Ravindra Jadeja and Mohd. SirajScorecard ▶️ https://t.co/Hu11cnrocG#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/XwAptOQ13s
— BCCI (@BCCI) November 22, 2025
தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான தொடக்கத்தை அளித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஐடன் மார்க்கரம் மற்றும் ரியான் ரிக்கல்டன் அரைசத பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஐடன் மார்க்கரம் 38 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டமிழக்க செய்தார். பின்னர், டி-பிரேக்கிற்கு பிறகு குல்தீப் யாதவ் தொடக்க வீரரான ரியான் ரிக்கல்டனை 35 ரன்களில் ஆட்டமிழக்க, டெம்பா பவுமா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் 41 ரன்களுடனும், ஸ்டப்ஸ் 49 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக உள்ளே வந்த வியான் முல்டரும் அவுட்டாக, அப்போது தென்னாப்பிரிக்கா அனி 5 விக்கெட்டுகள் இழப்பிறு 201 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 28 ரன்கள் எடுத்திருந்த டோனி டி சோரிஜி முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தாலும், கடைசி ஆட்டத்தில் அவர்கள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போது, இரண்டாவது நாள் காலையில், தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸை 300 ரன்களுக்குக் கீழே கட்டுப்படுத்த இந்திய அணி முயற்சிக்கும்.
குவஹாத்தி டெஸ்டுக்கான இந்திய அணி விளையாடும் லெவன் :
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, சாய் சுதர்ஷன், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்