AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சீன் பட ஷூட்டிங்கின் போது நடிகர் நஸ்லேனுக்கு சூப்பர் கிஃப்ட் கொடுத்த சூர்யா – என்னனு தெரியுமா?

Actor Suriya Special Gift For Actor Naslen | மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நஸ்லேன். இவர் சமீபத்தில் நடிகர் சூர்யாவின் சீன் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கத்.

சீன் பட ஷூட்டிங்கின் போது நடிகர் நஸ்லேனுக்கு சூப்பர் கிஃப்ட் கொடுத்த சூர்யா – என்னனு தெரியுமா?
நஸ்லேன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Nov 2026 17:25 PM IST

மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நஸ்லேன் (Actor Naslen). இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் நஸ்லேன் தொடர்ந்து மலையாள சினிமாவில் நாயகனாகவும் முக்கியமான வேடத்தில் நடித்து வந்த இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மொழி ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வந்தார். இந்த நிலையில் நடிகர் நஸ்லேன் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி உள்ள படம் சீன். இந்தப் படத்தில் அவர் நாயகனாக நடிக்கவில்லை மாறாக நடிகர் சூர்யாவிற்கு வில்லனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சீன் படத்தில் நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக இருப்பார். ஆனால் அவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கண் பார்வை குறைபாடு ஏற்படுகின்றது. அதனைத் தொடர்ந்து அவர் எப்படி அதனை சமாளிக்கிறார், மேலும் சைக்கோ கொளையாளியாக உள்ள நஸ்லேனை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை.

நஸ்லேனுக்கு சூப்பர் கிஃப்ட் கொடுத்த சூர்யா:

இந்தப் படத்தில் நடிகர் நஸ்லேனின் நடிப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் நஸ்லேன் சமீபத்தில் அவரது புதுப் படத்தின் புரமோஷனில் இருக்கும் போது சூர்யா கொடுத்த கிஃப்ட் குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி நடிகர் நஸ்லேன் கூறியதாவது, ஒரு நல்ல கைக்கடிகாரம், தரமான காலணிகள் என நேர்த்தியாக உடை அணிய வேண்டும் என்பது என் நீண்டகாலக் கனவு. இந்த கைக்கடிகாரத்தை எனக்குப் பரிசளித்தவர் சூர்யா அண்ணா. இதைப் பொது மேடையில் பகிர்ந்துகொள்ளச் சரியான தருணத்திற்காகக் காத்திருந்தேன்; நீங்கள் சரியாக அந்தச் சமயத்தில் இதைப் பற்றிக் கேட்டுவிட்டீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… ஆக்‌ஷனுக்கு ரெடியா… சூர்யாவின் 49-வது படத்தின் இயக்குநர் இவரா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர் சூரியின் 7-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? அப்டேட் இதோ

Follow Us