நா பேசுனாலே பிரச்சனைதான்… தர்மன் பட விழாவில் ரஜினிகாந்தின் கலகல பேச்சு – வைரலாகும் வீடியோ
Superstar Rajinikanths speech at Dharaman movie launch event | சூப்பர் ஸ்டார் என்று உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் டைட்டில் வெளியீடு மற்றும் தொடக்க விழா இன்று நடைப்பெறும் நிலையில் அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே பிரபலமானது அவரது ஸ்டைல் முக்கிய காரணம். படங்களில் அவர் காட்டும் ஸ்டைல் மக்களிடியே அவர் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் பிறகு வில்லன் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தார். சினிமாவில் வில்லன்களை பிடித்தவர்களின் எண்ணிக்கை குறைவு. அப்படி வில்லனாக நடிக்கும் போதே தனது ஸ்டைலான நடிப்பின் காரணமாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு உலக அளவில் தனக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.
இப்படி படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 171 படங்கள் வெளியாகி உள்ளது. அடுத்ததாக 172-வது படமாக ஜெயிலர் 2 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 173-வது படமாக உருவாக உள்ள தர்மன் படத்தின் தொடக்க விழா நடைப்பெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.




பேசினா பிரச்சனை… பேசலனா கேலி…
அதன்படி தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், நா பேசுனாலே பிரச்சனை தான். எதாது கெளப்பிடே இருப்பாங்க. நா சும்மா பேசாம இருந்தாஇவரு என்ன எதுவுமே பேச மாட்டீங்றாரு. வாய்ல என்ன கொலுகட்டையா வெச்சுருக்கானு கேப்பாங்க. கிண்டல் பண்வாங்க. சரினு பேசுனா ஆஹ்ஹ் இப்ப பேசுனு சொல்லுவாங்க. ரொம்ப நாள் அப்பறம் தான் நா ஒரு விசயத்த தெரிஞ்சுகிட்டேன். நம்மல் புடிக்காதவங்களுக்கு நம்ம என்ன செஞ்சாலும் எது பண்ணாலும் புடிக்காது. நம்மல புடிச்சவங்களுக்கு நம்ம என்ன பண்ணாலும் புடிக்கும் அப்டினு நெனைக்கறது முட்டாள்தனம் என்று மிகவும் வெளிப்படையாக பேசினார்.
கமல் உடனான நட்பு குறித்து எவ்வளவு பேசினாலும் போதாது:
கமல்ஹாசனுடனான என் நட்பைப் பற்றி எவ்வளவு பேசினாலும் அது போதாது. அவர் எனக்கு அளித்த உதவிகள், ஊக்கம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை அளப்பரியவை. 70-களிலேயே அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாகத் திகழ்ந்தார். இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்கு என்னை அவர்தான் பரிந்துரைத்தார். அப்படம் எனக்குப் பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. அதில் ஒரு காட்சியில், நான் அவரைப் பார்த்து இங்க… இங்க… என்று சொல்ல வேண்டியிருந்தது. அதைச் செய்ய எனக்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. ஆனால் அந்தக் காட்சி முடிந்ததும், அவர் ரஜினி, சூப்பர்… என்று பாராட்டினார்.
ஆடு புலி ஆட்டம் படத்தின் படப்பிடிப்பின்போது, நான் ஷேவ் (shaving) செய்துகொண்டிருக்கும்போது போலீஸ் என்னைத் துரத்தி வரும் ஒரு காட்சி இருந்தது. ஓடிக்கொண்டே ஷேவ் செய்வதைத் தொடரலாம் என்று நான் ஒரு யோசனை சொன்னேன். இயக்குநருக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆனால் கமல், அது நன்றாக இருக்கும் சார்… அவர் புதிதாக ஏதாவது செய்யட்டுமே, என்று கூறினார். அவர் எனக்குச் செய்த உதவிகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Also Read… மா இண்டி பங்காரம் படத்தின் வெற்றி… சமந்தாவை நேரில் அழைத்து பாராட்டிய சிரஞ்சீவி!
இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்தின் பேச்சு:
Superstar #Rajinikanth‘s starts off his speech with a punch on his haters..😅
“Naa pesnaale problem.. Edhadhu kelapite irupanga.. Na chumma irundha.. Ivaru enna pesave matingranga.. Vaai la enna kolukatta vechrukara.. Apdinu solli kindal panvanga.. Pesna.. Ahhh ipo pesu.. apdinu… pic.twitter.com/Au9swM4Tha
— Laxmi Kanth (@iammoviebuff007) June 24, 2026
Also Read… Ram In Leela: ரியோவின் ராம் இன் லீலா படம்.. முதல் பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?