AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Arasan: அன்பு மற்றும் அரசனின் சந்திப்பு.. சிம்புவின் அரசன் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Arasan Movie cameo: இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுவரும் படம்தான் அரசன். இதில் சிலம்பரசன் நாயகனாக நடிக்க, வட சென்னை பட டைம் லைனில் நடக்கும் படமாக உருவாக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் இருப்பதாக தகவல்கள் வைரலாகிவருகிறது.

Arasan: அன்பு மற்றும் அரசனின் சந்திப்பு.. சிம்புவின் அரசன் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
தனுஷ் மற்றும் சிம்புImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 24 Jun 2026 08:21 AM IST

கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் தனது சிறுவயது முதல் ஆதிக்கம் செலுத்திவருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவர் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 48 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் 49வது படமாக தயாராகிவருவதுதான் அரசன் (Arasan). இந்த படத்தில் தமிழ் பிரம்மாண்ட இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்க, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு (Kalaipuli S Thanu) தயாரித்துவருகிறார். இவரின் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமான கதையில் இது உருவாக்கப்பட்டுவருகிறது. இந்த படத்தில் சிலம்பரசன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக டூரிஸ்ட் பேமிலி பட நடிகை யோகலட்சுமி (Yogalakshmi) நடித்துவருகிறார். மேலும் இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகனும் (Priyanka Mohan) முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படமானது தனுஷின் வட சென்னை பட டைம் லைனில் நடந்த மற்றொரு கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இப்படத்தில் தனுஷ் நடிப்பாரா? என ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது குறித்து இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷின் இம்மார்டல் படத்திலிருந்து வெளியானது லவ்-யூ லவ்-யூ காட்டேரி பாடல்

சிலம்பரசனின் அரசன் படத்தில் தனுஷ் நடிக்கிறாரா:

அந்த பதிவில் இயக்குநர் வெற்றிமாறன், வட சென்னை பட அன்பு (தனுஷ்) மற்றும் அரசன் (சிம்பு) இருவரையும் அரசன் படத்தின் மூலம் திரைக்கு கொண்டுவர நினைக்கிறாராம். அரசன் பட கதையின்படி தனுஷ் மற்றும் சிலம்பரசன் இருவரும் சந்திப்பது போன்ற காட்சிகள் இருக்கிறதாம். ஆனால் அது நடக்குமா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

இதையும் படிங்க: ரிலீஸ் தேதியை லாக் செய்தது லவ் ஓ லவ் படக்குழு – வைரலாகும் அப்டேட்

அண்மையில் நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, அரசன் படத்தில் தனுஷ் நடிப்பாரா என கேட்டதற்கு, “அரசன் பட கதைக்கு தனுஷ் தேவைப்பட்டால், நிச்சயம் அவரை நடிக்கவைப்போம்” என தெரிவித்திருந்தார். அவ்வாறு இது உண்மையானால் திரையரங்கமே தீப்பிடிக்கும் அளவிற்கு வரவேற்பு இருக்கும்.

சிலம்பரசனின் அரசன் படத்தில் தனுஷ் நடிக்கிறாரா என்பது குறித்து வைரலாகும் பதிவு:

தற்போது சிலம்பரசனின் அரசன் படத்தின் 60 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துவரும் நிலையில், சிறப்பாக பாடல்கள் தயாராகிவருகிறது. இதில் வட சென்னை படத்தில் நடித்திருந்த பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள நிலையில், தனுஷும் நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இது நடந்தால் நிச்சயம் படம் சூப்பர் ஹிட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us