AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எனக்கு ஸ்வாசிகா – மோகன்லால் சார் மேல பயங்கரா கோவம்… விஜய் ஆண்டனி கலகல பேச்சு

Vijay Antony talks about Swasika and Mohanlal | தமிழ் சினிமாவில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியனா படம் நூறு சாமி. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி நடிகர்கள் ஸ்வாசிகா மற்றும் மோகன்லால் குறித்து கலகலப்பாக பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

எனக்கு ஸ்வாசிகா – மோகன்லால் சார் மேல பயங்கரா கோவம்… விஜய் ஆண்டனி கலகல பேச்சு
ஸ்வாசிகா, விஜய் ஆண்டனி, மோகன்லால்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jun 2026 11:06 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நூறு சாமி. இயக்குநர் சசி எழுதி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஸ்வாசிகா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், சக்தி காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த், பதின் குமார், ஜென்சன் திவாகர் பகவதி பெருமாள், வினோதினி வைத்தியநாதன், தாமரை, கோடாங்கி வடிவேலு, முத்து அழகி, சாரதா, சபிதா ராய், அபிநயா, மூர்த்தி மற்றும் சுப்ரமணியம் சிவா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தில் நடிகை ஸ்வாசிகா மற்றும் விஜய் ஆண்டனியின் நடிப்பு ரசிகர்களிடையே வெகுவாகப் பாராட்டப்பட்டது. மேலும் இந்தப் படத்தின் வெற்றியைப் படக்குழு கொண்டாடி வரும் நிலையில் தற்போது விஜய் ஆண்டனி நடிகர்கள் ஸ்வாசிகா மற்றும் மோகன்லால் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எனக்கு ஸ்வாசிகா – மோகன்லால் சார் மேல பயங்கரா கோவம்:

நூறு சாமி படத்தின் வெளியீட்டிற்கு பிறகு கேரளாவில் நடைப்பெற்ற விழா ஒன்றில் நடிகர் மோகன்லால் உடன் இணைந்து நடனம் ஆடி இருந்தார் ஸ்வாசிகா. அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் சமீபத்தில் நூறு சாமி படத்தின் வெற்றி விழாவில் விஜய் ஆண்டனி பேசியதாவது, எனக்கு ஸ்வாசிகா மற்றும் மோகன்லால் சார் மேல பயங்கரா கோவம். நான் நிஜமாதான் சொல்றேன், நூறுசாமி இங்கே தியேட்டர்களில் ஓடுகிறது, ஆனால் ஸ்வாசிகா மோகன்லாலுடன் நடனமாடுகிறார். விஜய்ஆண்டனி ஆ விட்டுட்டு மோகன்லால் கூட போயிட்டாங்கனு வருதமா இருக்கு என்று கலகலப்பாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் – ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்

இணையத்தில் வைரலாகும் விஜய் ஆண்டனியின் பேச்சு:

Also Read… இவ்வளவு நெருக்கமான சொந்தமா? அனிருத்துக்கு ஒய்.ஜி.மகேந்திரன் எப்படி உறவுக்காரர் தெரியுமா?

Follow Us