AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புலி வேட்டைக்குத் திரும்புகிறது… இன்று மாலை வெளியாகிறது ஜெயிலர் 2 குறித்த முக்கிய அப்டேட்

Jailer 2 Movie Update | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படங்களில் ஒன்று ஜெயிலர் 2. இந்தப் படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை இன்று மாலை வெளியிட உள்ளதாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புலி வேட்டைக்குத் திரும்புகிறது… இன்று மாலை வெளியாகிறது ஜெயிலர் 2 குறித்த முக்கிய அப்டேட்
ஜெயிலர் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 02 Jul 2026 11:45 AM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழக மக்களிடையே மட்டும் இன்றி உலக அளவில் உள்ள மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தனது நடிப்பு மற்றும் ஸ்டைல் மூலமாக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக கூலி படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாஸ் காட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜெயிலர் 2.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஜெயிலர். ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்தப் படத்தின் இரண்டாவது பாகமாக ஜெயிலர் 2 தற்போது உருவாகி உள்ளது. முதல் பாகம் முடிவடையும் போதே இரண்டாவது பாகத்திற்கான லீடை இயக்குநர் வைத்து இருந்தார். பாகுபலி படத்தின் முதல் பாக க்ளைமேக்சில் கட்டப்பா ஏன் பாகுபலியை குத்தினார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது போல இந்த ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் முத்துவேல் பாண்டியன் தனது மகனை சுட்டாரா இல்லையா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

இன்று மாலை வெளியாகிறது ஜெயிலர் 2 குறித்த முக்கிய அப்டேட்:

இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்க விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது ஜெயிலர் 2 படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் இன்று மாலை 6 மணிக்கு படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

Also Read… நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்திலிருந்து வெளியானது லேடிஸ் & லேடிஸ் வீடியோ

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… படப்பிடிப்பை நிறைவு செய்தது மொத ராத்திரி டீம் – வைரலாகும் போஸ்ட்

Follow Us