AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இதயம் முரளி படத்தின் தமிழ் நாடு ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

Idhayam Murali movie theatrical rights | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அதர்வா முரளி. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இதயம் முரளி. இந்தப் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளது.

இதயம் முரளி படத்தின் தமிழ் நாடு ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்
இதயம் முரளி Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jul 2026 13:58 PM IST

தமிழ் சினிமாவில் இந்த ஜூலை மாதம் அதிக அளவில் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி இன்று 03-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பெரியப் படமாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள கட்டா குஸ்தி 2 படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக வருகின்ற 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதில் குறிப்பாக நடிகர் அதர்வா முரளி நடிப்பில் உருவாகி உள்ள இதயம் முரளி படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக உள்ள ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆகும் இந்த இதயம் முரளி படம் கடந்த 2025-ம் ஆண்டில் இருந்தே தொடங்கி நடைப்பெற்று வந்தது. இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இதயம் முரளி படத்தின் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்:

இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழ் நாட்டின் படத்தினை வெளியிட உள்ள நிறுவனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இதயம் முரளி படத்தினை தமிழ் நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பாக இன்பன் உதயநிதி வெளியிடுகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் நானியின் தி பாரடைஸ் படம் – வைரலாகும் முக்கிய தகவல்

இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா 47 படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Follow Us