பராசக்தியில் அறிஞர் அண்ணா பேசும் வசனத்தை கவனித்தீர்களா? வைரலாகும் வீடியோ
Parasakthi Trailer Highlights: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் வருகிற ஜனவரி 10, 2025 அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில், அதில் அண்ணா பேசும் வசனம் வைரலாகி வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் பராசக்தி (Parasakthi). இந்தப் படத்துக்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ் குமாரின் 100வது படமாகவும் உருவாகியுள்ளது. இந்தப் படம் 1960களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் செழியன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஜனவரி 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பராசக்தி டிரெய்லரில் அண்ணா பேசும் வசனம்
பராசக்தி திரைப்படம் கடந்த 1960களில் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த நிலையில் டிரெய்லரில் சிவகார்த்திகேயன் ரயில்வேயில் வேலை செய்யும் நிலையில் ஹிந்தி தெரியாததற்காக அவர் விமர்சிக்கப்படுகிறார். மற்றொரு பக்கம் தம்பி அதர்வா கல்லூரியில் படிக்கும் நிலையில் இந்தி மொழிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகிறார். அப்போது டெல்லிக்கு போய் சொல் என ஒரு கதாப்பாத்திரம் சொல்ல, டெல்லி தான் இந்தியாவா என அதர்வா கேள்வி எழுப்புகிறார்.
இதையும் படிக்க : இது அண்ணன் தம்பி பொங்கல்… ஜனநாயகன் vs பராசக்தி – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்




மற்றொரு பக்கம் ஸ்ரீலீலாவிடம் சிவகார்த்திகேயன் இந்தி கற்றுக்கொடுக்க சொல்கிறார். இந்த நிலையில் தான் அதர்வா கதாப்பாத்திரம் இறந்து விட, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையெடுப்பது போல புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களின் போராட்டத்தை அடக்க வரும் காவல்துறை அதிகாரியாக ஜெயம் ரவி வருகிறார்.
டிரெய்லரில் 1964 ஆம் வருடம் என சொல்லப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. திமுக எதிர்கட்சியாக இருந்தது. இந்த நிலையில் இந்த டிரெய்லரில் அறிஞர் அண்ணாவின் கதாப்பாத்திரத்தில் சேத்தன் வருகிறார். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்த இயக்கம் திமுக என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிரெய்லரில் அண்ணா கதாப்பாத்திரம், இதற்கு பின்னால் நாங்கள் இல்லை. ஆனால் பண்ணவன் யாராக இருந்தாலும் அவன் தம்பி என கூறுகிறார். இது டிரெய்லரில் ஹைலைட்டாக அமைந்துள்ளது.
ஜன நாயகன் VS பராசக்தி
பராசக்தி படம் வெளியாகும் ஒரு நாள் முன்னதாக ஜனவரி 9, 2026 அன்று நடிகர் விஜய்யின் கடைசி படமாக கூறப்படும் ஜன நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு விஜய் முழு நேர அரசயலில் இறங்கியுள்ள நிலையில், அவரை நடிகராக மீண்டும் பார்க்க முடியாது என்பதால் அவரது ரசிகர்கள் ஜனநாயகன் படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் விஜய் படத்துடன் சிவகார்த்திகேயன் மோதுவதாக இரு தரப்பு ரசிகர்களிடையே சமூக வலைதலங்களில் பெரும் சலசலப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிக்க : Jana Nayagan: ஜன நாயகன் படம் முழுமையாகவே பகவந்த் கேசரி பட ரீமேக்கா? ட்ரெய்லரில் ஒத்துப்போன காட்சிகள்..
இந்த நிலையில் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், ஜனநாயகன் படம் கடந்த 2025 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வரவிருப்பதால், பராசக்தி படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டதாகவும், திடீரென ஜனநாயகன் பொங்கலுக்கு தள்ளிப்போனதால் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். இது தொடர்பாக விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் மூலம் விஜய்யிடம் பேசியபோது, தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என கூறிய அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் இது அண்ணன் – தம்பி பொங்கல் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.