நானும் அதுபோன்ற படங்களில் நடிக்க விரும்புகிறேன் – கௌதம் வாசுதேவ் மேனன் பேச்சு!
Gautham Vasudev Menon: தென்னிந்திய சினிமாவில் காதல் மற்றும் ரோமெண்டிக் நிறைந்த படங்கள் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன்தான். இயக்குநரான இவர் தற்போது படங்களிலும் நடித்துவருகிறார். இந்நிலையில் தான் எந்த மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்பதை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவர்தான் கௌதம் வாசுதேவ் மேனன் (Gautham Vasudev Menon). இவரின் இயக்கத்தில் சூர்யா (Suriya) முதல் விக்ரம் (Vikram) வரை பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். அந்த விதத்தில் இவர் இயக்குநராக மட்டுமில்லாமல் தற்போது படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துவருகிறார். மேலும் இவர் இறுதியாக தமிழில் டிடி நெக்ஸ்ட் லெவன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இதை நகைச்சுவை வேடத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்திருந்தார். இதனை அடுத்ததாக தளபதி விஜய்யின் (Thalapahy Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படத்திலும் இவர் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 2026 ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர்களுடன் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசியிருந்தார்.
அதில் அவர், “காந்தாரா, வெற்றிமாறன் படங்கள் மற்றும் பா. ரஞ்சித்” போன்றோரின் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக வெளிப்படையாக கூறியுள்ளார். ஒரு இயக்குநராக மட்டுமில்லாமல் மற்ற பிரபல இயக்குநர்களின் படங்களிலும் இவர் நடிக்க ஆசைப்படுகிறார் என இணையத்தில் இந்த தகவல் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: பிக்பாஸில் விக்ரம் நல்லா கொளுத்தி போடுவார்… வியானா கருத்தால் கண்கலங்கிய விக்ரம்
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசிய விஷயம் :
அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், அதில் “நானும் காந்தாரா, அல்லது வெற்றிமாறன் மற்றும் பா. ரஞ்சித் போன்றோர்களின் படங்களில் நடிப்பதற்கு விரும்புகிறேன். அப்போதுதான் அது பான் இந்தியனாக எட்டமுடியும். ஆனால் அது எப்போதுமே எனக்கு ஒரு தற்காலிக சிந்தனையாகத்தான் இருக்கும்.
இதையும் படிங்க: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்தப் படம் இப்படிதான் இருக்குமாம் – என்ன சொல்லி இருக்கார் பாருங்க
நான் எப்போதுமே பேனாவை தொடும் தருணம் எனக்கு ஒரு வழக்கமான விஷயமாகவே இருக்கும். ஏனென்றால் நான், என் தனிப்பட்ட முறையில் அந்த விஷயங்களுடன் இணைக்கிறேன்” என அந்த நேர்காணலில் வெளிப்டையாகப் பேசியிருந்தார்.
தனது மலையாள படம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Now on Digital.
HappyNewYear2026 🙂@mammukka @ZEE5Tamil @zee5malayalam pic.twitter.com/IUZU11G6zq
— Gauthamvasudevmenon (@menongautham) January 3, 2026
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் தயாராகி கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகாமல் இருக்கும் படம் துருவ நட்சத்திரம். இதில் சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது 2026ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.