கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் இதுதான்… போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Actress Mamitha Baiju's character in Kara Movie: நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து அடுத்ததாக திரிஅயரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். ஆக்ஷன் ட்ராமா மற்றும் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த கர படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சாரமூடு, எம்.எஸ். பாஸ்கர், ஸ்ரீஜா ரவி என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 30ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஸ்னல் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் இதுதான்:
இந்த நிலையில் இந்தப் படத்தில் முன்னதாக நடிகர் தனுஷின் கதாப்பாத்திரத்தின் பெயர் வெளியானது. அதன்படி இந்தப் படத்தில் தனுஷிற்கு கரசாமி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் நாயகி மமிதா பைஜுவின் கதாப்பாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி நடிகை மமிதா பைஜுவிற்கு கர படத்தில் செல்லி என்று பெயர் வைத்துள்ளனர். இது தொடர்பான போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. படம் திரையரங்குஅக்ளில் வெளியாக இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தியேட்டரில் கெத்து காட்டும் தாய் கிழவி படம்… 25-வது நாளை கொண்டாடும் படக்குழு
கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Meet SELLI from the world of #Kara..
Next drop today at 5 PM ❤️#FacesOfKara#KaraFromApril30
Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical 🥁@dhanushkraja @_mamithabaiju @velsmusicintl @kushmithaganesh @ThinkStudiosInd pic.twitter.com/8d9E2kd0xh— Vels Film International (@VelsFilmIntl) March 24, 2026
Also Read… சினிமாவில் 49 ஆண்டுகளை கடந்த ராதிகா சரத்குமார்.. கேக் வெட்டி கொண்டாடிய ஹாய் படக்குழு!