AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் யூத் படம்… இதுவரை வசூலித்தது எவ்வளவு தெரியுமா?

Ken Karunas Youth Movie Box Office Collection Update: தமிழ் சினிமாவில் நடிகர் கென் கருணாஸ் இயக்கி நாயகனாக அறிமுகம் ஆன படம் யூத். இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் வசூல் எவ்வளவு என்பது குறித்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் யூத் படம்… இதுவரை வசூலித்தது எவ்வளவு தெரியுமா?
யூத்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Mar 2026 12:01 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஸ்கூல் கான்செப்ட்டில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழ் சினிமாவில் வித் லவ் என்ற படம் வெளியானது. இந்தப் படமும் ஸ்கூல் கான்செப்டை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இந்த ஆண்டிலேயே அடுத்ததாக ஸ்கூல் கான்செப்டில் வெளியாகி உள்ள படம் யூத். இந்தப் படத்தை நடிகர் கென் கருணாஸ் எழுதி இயக்கி உள்ளார். படம் கடந்த 19-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்தப் படத்தின் மூலம் கென் கருணாஸ் இயக்குநராகவும் நாயகனாகவும் மட்டும் இன்றி பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் அறிமுகம் ஆகி உள்ளார். அதிக அளவில் அறிமுக நடிகர்கள் நடித்து உள்ள இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் யூத் படம் 4 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

யூத் படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பள்ளியில் படிக்கும் டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த யூத் படத்தை தயாரிப்பு நிறுவனங்களான பார்வதா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் கருப்பையா சி.ராம் மற்றும் சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படம் 4 நாட்களில் 28.3 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தியேட்டர் ரிலீஸிற்கு பிறகு கருப்பு படத்தை எந்த டிவி சேனலில் பார்க்கலாம் தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

யூத் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் டீசர்

Follow Us