AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

GV Prakash: அரசன் படத்திற்கு ஏன் இசையமைக்கவில்லை? உண்மையை உடைத்த ஜி.வி. பிரகாஷ்!

G.V. Prakash About Arasan Movie: தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமிக்க இசையமைப்பாளராக இருந்துவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரின் இசையமைப்பில், நடிப்பிலும் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர் ஏன் வெற்றிமாறனின் அரசன் படத்தில் பணியாற்றவில்லை என்பது குறித்த உண்மையை தெரிவித்துள்ளார்.

GV Prakash: அரசன் படத்திற்கு ஏன் இசையமைக்கவில்லை? உண்மையை உடைத்த ஜி.வி. பிரகாஷ்!
வெற்றிமாறன், சிம்பு மற்றும் ஜிவி பிரகாஷ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Mar 2026 15:56 PM IST

நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar), சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக நுழைந்தார். இவரின் இசையமைப்பில் வெளியான முதல் படம்தான் வெயில் (Veyil). இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்தார். அதையடுத்து நடிப்பின் மீதும் ஆசைப்பட்ட அவர், கடந்த 2015ம் ஆண்டில் வெளியான டார்லிங் (Darling) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக நுழைந்தார். இந்த படத்தை அடுத்தாக கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் தற்போது வெளியீட்டிற்கு தயாராகியுள்ள திரைப்படம்தான் ஹேப்பி ராஜ் (Happy Raj). இப்படத்தை இயக்குநர் மரியா ராஜா எலஞ்செழியன் (Maria Raja Elanchezhian) இயக்கியுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா (Sri Gauri Priya) இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது வரும் 2026 மார்ச் 27ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நடிகர் ஜி.வி. பிரகாஷ், வெற்றிமாறன் (Vetrimaaran) மற்றும் சிலம்பரசனின் (Silambarasan) அரசன் (Arasan) படத்தில் ஏன் இசையமைப்பாளராக பணியாற்றவில்லை என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்தது விஸ்வநாத் & சன்ஸ் பட டீசர்

அரசன் படத்தில் ஏன் பணியாற்றவில்லை என்பதற்கு விளக்கம் கொடுத்த ஜி.வி. பிரகாஷ் குமார்:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் குமார் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தொகுப்பாளர், “அரசன் திரைப்படத்திற்காக வெற்றிமாறன் ஏன் வேறு இசையமைப்பாளரை தேர்வு செய்தார்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார், “உண்மையிலே நான் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடனும் படங்களில் பணியாற்றியிருக்கிறேன். வெற்றிமாறன் ஏன் வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றக்கூடாது. இந்த விஷயத்தை அவர், நான் இசையமைப்பாளராக தொழில் தொடங்கிய ஆரம்பத்தில் செய்திருந்தால் நிச்சயம் கோபப்பட்டிருப்பேன்.

இதையும் படிங்க: ‘துரந்தர் 2’ படத்தை உச்சிமுகர்ந்த ரஜினிகாந்த்.. “வாழ்வின் மிகப்பெரிய தருணம்” என மெய்சிலிர்த்த இயக்குநர்..

ஆனால் இப்போது நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். நானும் புதிய திறமையாளர்கள் மற்றும் புதிய கூட்டணியுடன் படங்களில் பணியாற்றவிரும்புகிறேன். அதனால்தான் நான் யூத் படத்திற்கு இசையமைத்தேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது.

ஹேப்பி ராஜ் திரைப்படம் குறித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட பதிவு:

இந்த ஹேப்பி ராஜ் படமானது முற்றிலும் காமெடி, எமோஷனல் மற்றும் கருத்துள்ள திரைப்படமாக தயாராகியுள்ளதாம். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் அப்பாஸ், ஜார்ஜ் மரியான் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2026 மார்ச் 27ம் தேதியோடு உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படம் ஜி.வி.பிரகாஷிற்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us