AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

Sivakarthikeyans Seyon Movie Shooting Update Viral On Social Media: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள சேயோன் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
சேயோன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Mar 2026 17:38 PM IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நாயகனாக நடித்து மொத்தம் இதுவரை 25 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் ஆரம்ப காலக்கட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து காமெடியை மட்டுமே மையமாக வைத்து பலப் படங்களில் நடித்து வந்தார். இந்தப் படங்கள் அதிக அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காமெடியை மையமாக வைத்து படங்களில் நடித்து வந்ததால் அனைத்து வயதினரையும் தன்வசப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கதைகளுக்கு முக்கியதுவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி.

இது சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள 26-வது  படம் குறித்து அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சேயோன் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?

இந்த சேயோன் படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்க உள்ளார். இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தாய் கிழவி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களில் 75 கோடிகள் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது இயக்கத்தில் உருவாக உள்ள சேயோன் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் சேயோன் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மதுரையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… நடிகர் ஷர்வானந்தின் பைக்கர் படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Kara Movie: கர பட தனுஷின் கதாபாத்திர அறிமுகம் எப்போது? படக்குழு கொடுத்த அப்டேட்!

Follow Us