AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ones More: கொஞ்சும் தென்றலா.. உயிர் கொல்லும் மின்னலா.. ஒன்ஸ் மோர் படத்தின் ‘இந்திரா’ வீடியோ பாடல் வெளியீடு!

Indra Song: நடிகர் அர்ஜுன்தாஸின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், இவர் நடித்துள்ள புது படம்தான் ஒன்ஸ் மோர். இந்த படத்திலிருந்து தற்போது இந்திரா என்ற இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Ones More: கொஞ்சும் தென்றலா.. உயிர் கொல்லும் மின்னலா.. ஒன்ஸ் மோர் படத்தின் ‘இந்திரா’ வீடியோ பாடல் வெளியீடு!
இந்திரா வீடியோ பாடல் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 03 Apr 2026 18:31 PM IST

தமிழில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் (Vignesh Srikanth) இயக்கத்தில், வித்தியாசமான காதல் கதைக்களத்தில் தயாராகியுள்ள படம்தான் “ஒன்ஸ் மோர்” (Ones More). இந்த படத்தில் நடிகர் அர்ஜுன்தாஸ் (Arjun Das) ஹீரோவாக நடித்துள்ள நிலையில், இவருடன் அதிதி ஷங்கர் (Aditi Shankar), சோனா ஒலிக்கல் (Sona Olickal) என இரு நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது முற்றிலும் ஃபீல் குட் காதல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. நடிகர் அர்ஜுன்தாஸ் இதுவரை தொடர்ந்து ஆக்ஷன், திரில்லர் மற்றும் அதிரடி கதைக்களத்தில், நடித்துவந்த நிலையில், இந்த ஒன்ஸ் மோர் படத்தின் முற்றிலும் எமோஷனல் மற்றும் காதல் கதையில் நடித்துள்ளார். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

இவரின் இசையில் ஒன்ஸ் மோர் படத்திலிருந்து ஏற்கனவே, “வா கண்ணம்மா” என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்தது. அந்த விதத்தில் தற்போது இப்படத்திலிருந்து 2வது பாடலாக “இந்திரா” (Indra) என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளது. மெலடி பாடலாக வெளியாகியுள்ள இது, தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: டிமாண்டி காலனி 3 பட ஷூட்டிங் ஓவர்.. திரில்லர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

ஒன்ஸ் மோர் படத்திலிருந்து வெளியான இந்திரா பாடல் குறித்த எக்ஸ் பதிவு:

இந்த இந்திரா பாடலின் வரிகளை இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத, பாடகர் ஹனன் ஷா பாடியுள்ளார். அந்த விதத்தில் இந்த பாடலில் அர்ஜுன்தாஸ் மற்றும் அறிமுக நடிகை சோனா ஒலிக்கல் இருவரும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் :

அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. இந்த படத்தில் முற்றிலும் ஃபீல் குட் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் நிலையில், இரு நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இப்படத்திலிருந்து இதுவரை 2 பாடல்கள் மற்றும் 2 டீசர் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஒர்க் ஷாப் வைக்கணும்-னு ஆசை.. நான் சினிமாவிற்கு வந்த காரணமே அதுதான் – அஜித் சொன்ன விஷயம்!

அந்த விதத்தில் இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதன்படி இப்படத்தை வரும் 2026 மே மாதத்தின் இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. அதன்படி இன்னும் இதன் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us