Nooru Saami Movie: விஜய் ஆண்டனியின் நூறு சாமி பட டீசர் எப்போது வெளியாகிறது? – அப்டேட் இதோ!
Nooru Saami Movie Teaser Update: விஜய் ஆண்டனியின் நடிப்பில் முற்றிலும் குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகியுள்ளதுதான் நூறு சாமி. இதை இயக்குநர் சசி இயக்கியுள்ள நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் சசி (Sasi). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் குறைவான படங்கள் வெளியாகியிருந்தாலும், முயற்றிலும் எமோஷ்னலான கதையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony) நடித்துள்ள புது படம்தான் நூறு சாமி (Nooru Saami). இவர்களின் கூட்டணி ஏற்கனவே பிச்சைக்காரன் (Pichaikkaran) என்ற படமானது வெளியாகியுள்ளது. அந்த வகையில் மீண்டும் 2வது முறையாக நூறு சாமி என்ற படத்தின் மூலம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுடன், ஸ்வாசிகா (Swasika), லிஜோமோல் ஜோஸ், அஜய் தேஷன், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் போன்றவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்திலிருந்து பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து படக்குழு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், நூறு சாமி படத்தின் டீசர் 2026 ஏப்ரல் 4ம் தேதியில் வெளியாகும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.




இதையும் படிங்க: தனுஷின் 55-வது படம் எப்போது ரிலீஸ் ஆகும் தெரியுமா? வைரலாகும் தகவல்
விஜய் ஆண்டனி வெளியிட்ட நூறு சாமி படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த பதிவு:
From true family events, comes a story of love, life, struggles and everything in between!
Teaser of #Noorusami | #VandaDevullu from tomorrow.
A #FamilyBiopic.@vijayantony #Sasi @vijayantonyfilm @SRCOffl #Swasika @AJDhishan990 @karunaasethu @jose_lijomol #BalajiSakthivel… pic.twitter.com/fs0uNl1XOa
— vijayantony (@vijayantony) April 3, 2026
இந்த நூறு சாமி திரைப்படமானது முற்றிலும் கிராமத்து குடும்பத்தின் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்வாசிகா நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் வேடத்தை விடவும் ஸ்வாசிகாவின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்கப்படும் என இயக்குநர் சசி தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: மிடில் கிளாஸில் இருந்து பணக்காரனாக நினைக்கும் கார் ஓட்டுனர்… எப்படி இருக்கு கார்மேனி செல்வம் படம் – விமர்சனம் இதோ!
இந்த படமானது எமோஷனல் பேமிலி கதைக்களத்தில், தயாராகியுள்ள நிலையில் 2026 மே 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறதாம். ஆனால் படக்குழு இன்னும் ரிலீஸ் தேதியை உறுதி செய்யவில்லை. இந்த படத்திற்கு இசையமைபாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையமைக்க, விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி, டீசரில் உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.