Silambarasan: எதிர்காலத்தில் அரசியலில் வருவீர்களா? கலகலப்பாக பதிலளித்த சிலம்பரசன்!
Silambarasan About political Entry: கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில், சிறப்பான நாயகனாக இருந்துவருபவர் சிலம்பரசன். இவர் இன்று தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது, வாக்கை செலுத்தியிருந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசிய நிலையில், எதிர்காலத்தில் அரசியல் குறித்து கலகலப்பாக பேசியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெளியாகிவருகிறது. இவர் தற்போது தமிழில் அரசன் (Arasan) என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இந்த படமானது தனுஷின் (Dhanush) வட சென்னை (Vada Chennai) படத்தின் டைம் லைனில் நடக்கும் மற்றொரு கதையாக தயாராகிவருகிறது. இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்க, கதாநாயகி யார் என இன்னும் உறுதியாகவில்லை. இதில் வட சென்னை படத்தில் நடித்திருந்த பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், சிலம்பரசன் இன்று (23/04/2026) சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக தனது வாக்கை செலுத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்திருந்தார். அப்போது அவரிடம் நீங்கள் எதிர்காலத்தில் அரசியல் வருவீர்களா? என்ற கேள்விக்கு, சிம்பு கலகலப்பாக பதிலளித்துள்ளார்.




இதையும் படிங்க: ஜன நாயகன் பட கசிவு… வேதனையுடன் பேசிய நடிகை மமிதா பைஜூ
அரசியல் வருவீர்களா என்ற கேள்விக்கு சிலம்பரசன் அளித்த பதில்:
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்த சிலம்பரசனிடம், “எதிர்காலத்தில் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிலம்பரசன், “ஏன் மா நா நல்ல ஜாலியா இருக்கிறது புடிக்கல. இப்போதான் பிரச்சனை எல்லாம் தீர்ந்து, நடிக்கலாம்-னு ஒரு முடிவோட இருக்கேன். நீங்க அத கெடுத்துவிட்டுருவீர்கள் போல இருக்கிறதே” என கலகலப்பாக பேசியிருந்தார். தற்போது இதுகுறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: தங்களின் ஜன நாயகக் கடமையை செய்த சிலம்பரசன், விஷால் மற்றும் சிம்ரன்!
அரசன் திரைப்படம் குறித்து நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட பதிவு:
Presenting the promo of #Arasan to you all 🙂#ARASANPromo – https://t.co/Jh7WCRRa4n#VetriMaaran @anirudhofficial @theVcreations #VCreations47 @prosathish @RIAZtheboss
— Silambarasan TR (@SilambarasanTR_) October 17, 2025
சமீபத்தில் தயாரிப்பாளர் ஒருவர் செய்த பிரச்சனையின் காரணமாக சிலம்பரசனின், அரசன் பட ஷூட்டிங் தடைபட்டுபோனது. தற்போது அந்த பிரச்சனைகள் எல்லாம் முடித்து அரசன் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதை வெற்றிமாறன் தீவிரமாக இயக்கிவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படமானது ஆக்ஷன், திரில்லர் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் தயராகிவருகிறது. மேலும் தனுஷின் வட சென்னை படத்தின் பின்னனியில் தயாராகிவரும் நிலையில், இப்படத்திற்கு தனுஷின் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. மேலும் தனுஷ் இப்படத்தில் கேமியோ வேடத்தில் நடிப்பாரா? என ரசிகர்கள் கேட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.