யார் கையறுத்துக்கொண்டு திருமணம் செய்தது என நிரூபிப்பேன் – ஆர்த்தியின் தாய் சுஜாதா பரபரப்பு பேச்சு!
Ravi Mohans Accusations: நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தி ரவி மீது பகிர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆக்ரோஷமாக பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில் ரவி மோகன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, ஆர்த்தி ரவியின் தாயும், தயாரிப்பாளருமான சுஜாதா அதிரடி பதிலை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரவி மோகன் (Ravi Mohan). இவர் தமிழ் தெலுங்கு மொழியில் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவர் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் தனது மனைவி ஆர்த்தி ரவியை (Aarthi Ravi) விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த விவாகரத்து குறித்து, தனக்கு எந்த வித தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை என்று ஆர்த்தி ரவியும் குற்றம்சாட்டியிருந்தார். அந்த வகையில், இவர்கள் இருவரின் விவாகரத்து வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இன்னும் விவாகரத்து வழங்கவில்லை. இந்நிலையில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் (Keneeshaa) பல்வேறு இடங்களுக்கு சென்றுவந்தனர். இந்நிலையில் கெனிஷாவை சைபர்புல்லிங் செய்வதாக, அவர் சமூக ஊடகங்களிலிருந்து மற்றும் சென்னையிலிருந்து செல்வதாக தெரிவித்திருந்தார். அந்த வகையில், இன்று 2026 மே 16ம் தேதியில் காலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியாக ரவி மோகன் பேட்டி கொடுத்திருந்தார்.
அதில் ஆர்த்தி ரவி, அவரின் தாய் சுஜாதா (Sujatha) மற்றும் பிரபல நடிகர் ஒருவரை குறிப்பிட்டு பெண்ணியம் பேசுவதாக பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இந்நிலையில் இதற்கெல்லாம் விளக்கம் கொடுக்கும் விதத்தில் தயாரிப்பாளரும், ஆர்த்தி ரவியும் தாயுமான சுஜாதா செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
இதையும் படிங்க: தனது குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நயன்தாரா – ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் பதிவு!




ரவி மோகனின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுத்த ஆர்த்தி ரவியின் தாய் சுஜாதா:
அந்த பேட்டியில் பேசிய சுஜாதா, “ரவி மோகன் தனது குழந்தைகளை பார்க்கவிடவில்லை என கூறியது பகிரங்கமான பொய். அதை யாராலும் பண்ணமுடியாது. மேலும் “ரவி மோகனை பிளாக்மெயில் பண்ணித்தான் திருமணம் செய்யவைத்ததாக குற்றச்சாட்டு எழுகிறது” என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு சுஜாதா, “2008ல் பத்திரிகை ஒன்றில், யார் கையறுத்துக்கொண்டு திருமணம் செய்துகொண்டார் என வந்திருக்கிறது. அதை தேடி கண்டுபிடித்து நானும் நிரூபிப்பேன். சினிமாவில் நடிக்கமாட்டேன் என சொன்னது அவருடைய இஷ்டம், இத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றால், அது அவருடைய முடிவு அதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை. எனது மருத்துவ செலவிற்கு மாதம் ரூ 25,000 அனுப்பியதாக சொல்கிறார்.
இதையும் படிங்க: திரைத்துறை மேம்பாடு.. முதலமைச்சர் விஜய்க்கு 6 கோரிக்கை வைத்த கமல்ஹாசன் – வைரலாகும் பதிவு!
அவ்வாறு நடக்கவில்லை, இருந்தாலும் மருமகனாக அவர் கடமையை செய்திருக்கிறார். நாங்கள் இதுவரைக்கும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பேச்சையும் நாங்கள் எடுக்கவில்லை. எல்லா பெற்றோர்களும் அவர் அவர்களின் குழந்தைகளுக்காகதான் இருக்கிறார்கள், நானும் எனது மகள்களுக்காக இருக்கிறேன். மேலும் ரவி மோகன் இந்த 2 வருடத்தில், அவர்களின் மகன்களை 2 முறையே பார்த்திருக்கிறார். விவாகரத்து பிரச்சனை தொடங்கி 2 வருடங்களுக்கும் மேல் ஆகிறது, ஆனாலும் தற்போதுவரையிலும் அவர் மீது நாங்கள் நல்ல நம்பிக்கை வைத்திருக்கிறோம். இதுவரைக்கும் ஏதும் தவறாக பேசவில்லை, எதிர்காலத்திலும் கூட அவரை பற்றி தவறாக எதுவும் பேசமாட்டோம்” என அதில் அவர் பதிலளித்து பேசியுள்ளார்.