AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மறைந்த பாடகி ஜமுனா ராணி தமிழில் பாடிய ஹிட் பாடல்கள் – சோகத்தில் ரசிகர்கள்

தென்னிந்திய திரையுலகில் பிரபல பாடகியான ஜமுனா ராணி தனது 88வது வயதில் பெங்களூருவில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 6000க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியிருக்கிறார் . அவரது மறைவு இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மறைந்த பாடகி ஜமுனா ராணி தமிழில் பாடிய ஹிட் பாடல்கள் – சோகத்தில் ரசிகர்கள்
பாடகி ஜமுனா ராணி
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Jul 2026 15:06 PM IST

தென்னிந்திய திரையுலகில் பிரபல பாடகியான ஜமுனா ராணி தனது 88வது வயதில் பெங்களூருவில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 6000க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியிருக்கிறார். அவரது மறைவு இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழில் கடந்த 1952 ஆம் ஆண்டு கல்யாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி மரணம்

தமிழில் காளை வயசு, செந்தமிழ் தேன் மொழியாள், யாரடி நீ மோகினி, பாட்டொன்று கேட்டேன், குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே, மாமா மாமா என அந்த காலகட்டத்தில் மெகா ஹிட்டான பல பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடல் மூலம் அடுத்த தலைமுறை ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

தமிழில் ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தக்ஷினா மூர்த்தி, ஏஎம் ராஜா, எஸ்.வி. வெங்கட்ராமன், சுப்பையா நாயுடு, விஸ்வநாதன், ராமமூர்த்தி, எஸ்.ராஜேஸ்வரராவ், ஜிகே வெங்கடேஷ், டிஆர் பாப்பா, வி குமார், இளையராஜா உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்கள் இசையில் புகழ்பெற்ற பாடல்களை பாடியிருக்கிறார். மேலும் டிஎம் சௌந்தரராஜன், பிபி ஸ்ரீநிவாஸ், ஏஎம் ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், சந்திரபாபு, பி சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி உள்ளிட்ட முன்னணி பாடர்களுடன் இணைந்து பாடல்களை பாடியிருக்கிறார்.

பாடகி ஜமுனா ராணி பாடிய புகழ்பெற்ற பாடல்கள்

மாலையிட்ட மங்கை படத்தில் செந்தமிழ் தேன்மொழியாள், அன்பு எங்கே படத்தில் மேலே பறக்கும் ராக்கெட்டு, உத்தமபுத்திரன் படத்தில் யாரடி நீ மோகினி, மரகதம் படத்தில் குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே, தெய்வப்பிறவி படத்தில் காளை வயசு கட்டான சைசு, படிக்காத மேதை படத்தில் பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு, குமுதம் படத்தில் மாமா மாமா, பாசமலர் படத்தில் பாட்டொன்று கேட்டேன், பலே பாண்டியா படத்தில் ஆதி மனிதன், அதே படத்தில் அத்திக்காய் காய் காய், இருகோடுகள் படத்தில் புன்னகை மன்னன், பூவிழி கண்ணன், நாயகன் படத்தில் நான் சிரித்தால் தீபாவளி உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த 1938 ஆம் ஆண்டு மே 17 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார். இவருக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி மற்றும் 2002 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாதுரை விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் பாடகி ஜானகி மறைந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் மீளாத நிலையில் தற்போது மற்றொரு பழம்பெரும் பாடகியும் மறைந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜமுனா ராணியின் மறைவு தென்னிந்திய இசையுலகுக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

Follow Us