Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு…தமிழகத்தில் 15 லட்சம் பேர் விண்ணப்பம்!

Tamilnadu Voter List: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 15 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான வாக்காளர் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு அடுத்த மாதம் பிப்ரவரியில் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு…தமிழகத்தில் 15 லட்சம் பேர் விண்ணப்பம்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15 லட்சம் பேர் விண்ணப்பம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 26 Jan 2026 10:42 AM IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தன. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 19- ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், தமிழகத்தில் முன்பு இருந்த 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில், 97 லட்சத்து 37 ஆயிரத்து 387 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு, 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த பட்டியலில் 66 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு மாறி சென்று இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்ப்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி இருந்தது.

12.80 லட்சம் வாக்காளர்கள் படிவம் 6 சமர்ப்பிப்பு

இந்த அவகாசம் கடந்த ஜனவரி 18- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இருந்த நிலையில், வரும் ஜனவரி 30- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 16- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 18 வயது பூர்த்தி அடைந்த 12 லட்சத்து 80 ஆயிரத்து 688 வாக்காளர்கள் படிவம் 6 மற்றும் 6ஏ-வை சமர்ப்பித்துள்ளனர். இதே போல, 32 ஆயிரத்து 388 இறந்த வாக்காளர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அவர்களது குடும்பத்தினர் படிவம் 7-ஐ சமர்ப்பித்துள்ளனர்.

மேலும் படிக்க: தஞ்சையில் நடக்கும் வெல்லும் தமிழ் பெண்கள் திமுக மகளிர் அணி மாநாடு.. சிறப்பு ஏற்பாடுகள் என்ன?

15.65 லட்சம் வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக தமிழகத்தில் தற்போது வரை 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதே போல, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கம் செய்வதற்காக 87 ஆயிரத்து 579 ஆயிரத்து பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் விடுபட்ட தங்களது பெயர்களை சேர்ப்பதற்காக கடந்த டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3 மற்றும் 4- ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

பிப்ரவரி 17- இல் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு

இந்த முகாம்களில் அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்தனர். அதன்படி, தற்போது, வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்ப்பதற்கு 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு அடுதத் மாதம் பிப்ரவரி 17- ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்பட உள்ளது.

மேலும் படிக்க: இனப்பெருக்க காலம்…கடற்கரைக்கு படையெடுக்கும் கடல் ஆமைகள்…உயிரிழப்பை தடுக்க ஆமை விலக்கு சாதனங்கள் அளிப்பு!