Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மஹாராஷ்டிராவில் பேச வேண்டியதை மதுராந்தகத்தில் பேசலாமா? பிரதமரின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்

MK Stalin Responds to PM Modi’s Accusation: மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக மஹாராஷ்டிராவில் எழுப்ப வேண்டிய கேள்வியை மதுராந்தகத்தில் எழுப்புவதா எனவும் குறிப்பிட்டார்.

மஹாராஷ்டிராவில் பேச வேண்டியதை மதுராந்தகத்தில் பேசலாமா? பிரதமரின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்
மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Jan 2026 21:03 PM IST

காஞ்சிபுரம், ஜனவரி 25 : காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), பிரதமர் நரேந்திர மோடியிடம் (Narendra Modi) பல கேள்விகளை முன்வைத்தார். மேலும், டெல்லியின் ஆதிக்கத்திற்கு தமிழ்நாடு ஒருபோதும் தலைவணங்காது” என்று உறுதியாகத் தெரிவித்த அவர், பிரதமர் மோடி சமீபத்தில் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக அரசை குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக பதிலளித்தார். மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் திமுக காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினார்.

பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

கடந்த ஜனவரி 23, 2026 அன்று வெள்ளிக்கிழமை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் நேரடியாக பதிலளித்தார். தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின், கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.11,303 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : விஜய் முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது…கே.ஏ.செங்கோட்டையன் சூளுரை!

இதில் பெரும்பாலான போதைப் பொருட்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் நீங்கள் சொல்லும் டபுள் எஞ்சின் அரசு தானே ஆட்சியில் உள்ளது? அப்படியானால், அந்த குற்றச்சாட்டுகளை அங்கே கேட்க வேண்டாமா? மகாராஷ்டிராவில் பேச வேண்டிய விஷயங்களை மதுராந்தகத்தில் பேசுவது நியாயமா? என்றார்.

மேலும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு முன் விடுதலை வழங்கக்கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தது எங்கள் திராவிட மாடல் அரசு தான். இப்படியிருக்க, தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும்? என்றார். திமுக அரசு செயல்படுத்தி வரும் புதுமைப் பெண், விடியல் பெண், தோழி விடுதி போன்ற நலத்திட்டங்களால் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக பங்கேற்பு கணிசமாக உயர்ந்துள்ளது. உயர் கல்வி பயிலும் பெண்கள் எண்ணிக்கையிலும், தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்கள் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு தான் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளது. இதை புரிந்து கொள்ளாமல், தமிழ்நாடு ஆளுநரைப் போல பேசுவது ஏன்? என்றார்.

இதையும் படிக்க : 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை.. டிடிவி தினகரனின் அதிரடி ட்விஸ்ட்..

தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மோடியா? லேடியா? என்று கேட்டது உங்களுக்கு நினைவில்லையா? அமித் ஷா, அதிமுக ஆட்சியை இந்தியாவின் ஊழல் மிக்க அரசு என்று சொன்னது மறந்துவிட்டதா? நீங்கள் மறந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தீர்கள்? ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடிந்ததா? 2026 சட்டமன்ற தேர்தலிலும் இதே தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் என்றார்.