திமுகவின் கவுண்டவுன் தொடங்கிவிட்டது – பிரதமர் மோடி பேச்சு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட துடிக்கிறது. தமிழ்நாடு இப்போது என்டிஏவின் அரசை விரும்புகிறது இந்த மேடையை பாருங்கள். என்டிஏ குடும்பத்தின் நம் மூத்த தலைவர்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியிருக்கிறார்கள் என்றார்.
சென்னை, ஜனவரி 23 : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜனவரி 23, 2026 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய பிரதம்ர் மோடி, திமுக குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
‘திமுகவின் கவுண்டவுன் தொடங்கிவிட்டது’
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட துடிக்கிறது. தமிழ்நாடு இப்போது என்டிஏவின் அரசை விரும்புகிறது. இந்த மேடையை பாருங்கள். என்டிஏ குடும்பத்தின் நம் மூத்த தலைவர்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியிருக்கிறார்கள். நாம் தமிழ்நாட்டின் வளர்ச்சியடைந்த பாதுகாப்பான ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுகவின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது என்று பேசினார்.




இதையும் படிக்க : ஊழல் நிறைந்த திமுக அரசுக்கு விடை கொடுக்க தயாரான தமிழ்நாடு – பிரதமர் மோடி..
பிரதமர் மடோிய பேசிய வீடியோ
#WATCH | Chengalpattu, Tamil Nadu: Prime Minister Narendra Modi says, “The NDA central government is running the PM Matsya Sampada Yojana. Under this scheme, fishermen are being provided with deep-sea fishing vessels. 50,000 Kisan Credit Cards have also been given to fishermen.… pic.twitter.com/vvKtNkP5tA
— ANI (@ANI) January 23, 2026
மேலும் பேசிய அவர் திமுகவுக்கு மக்கள் 2 முறை வாய்ப்பளித்தனர். ஆனால், அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டனர். அவர்கள் இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. சஎம்சி என அவர்களை மக்கள் அழைக்கிறார்கள். அதாவது ஊழல், குண்டாஸ், குற்றம் ஆகியவற்றின் அரசு இங்கு இருக்கிறது. அதனை வேரடி மண்ணோடு கிள்ளி எறிய மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்றார்.
இதையும் படிக்க : தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரஸ்?.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?..
மேலும் பேசிய அவர், சிறு விவசாயிகள் மற்றும் மீனவர்களை கூட்டுறவு அமைப்புகளுடன் இணைப்பதில் மத்திய அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் உணவு பதப்படுத்தல் துறைக்கு மிகுந்த வாய்ப்பு உள்ளது. தமிழக விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் உலக சந்தைகளுக்கு சென்றடைய மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்றார்.
அதே நேரத்தில், தமிழக அரசை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்க வலுவான இளைஞர்களின் சக்தியும், பெண்களின் சக்தியும் மிக முக்கியம். ஆனால், இங்குள்ள திமுக அரசு, தமிழக இளைஞர்களை போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாக்கியுள்ளது. போதைப்பொருள் கும்பல்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன என்றார்.