சென்னையில் இடைவிடாது கொட்டும் மழை.. இன்று எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..
Tamil Nadu Weather Update: சென்னையைப் பொறுத்தவரையில், ஜனவரி 23ஆம் தேதி தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழையாகவும், அவ்வப்போது மிதமான மழையாகவும், ஒரு சில இடங்களில் கனமழையாகவும் பதிவாகி வருகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்படுகின்றன. வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது.
வானிலை நிலவரம், ஜனவரி 26, 2026: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர தமிழக பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பதிவாகி வருகிறது. இந்த நிலையில், இந்த மழை அடுத்த இரண்டு நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குமரி கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரளா கடலோர பகுதிகள் வரை ஒரு கிழக்கு திசை வளிமண்டல காற்றாலை நிலவுகிறது. இதன் காரணமாகத்தான் தமிழகத்தில் தற்போது மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், ஜனவரி 26 தேதியான இன்று உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடரும் மழை:
அதே சமயத்தில், 27ஆம் தேதி நாளை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கரூர் சம்பவத்துக்கு நீங்களும் காரணம்… முதல்வரின் வீட்டில் கைகட்டி நின்றீர்கள்.. விஜய் மீது அதிமுக கடும் குற்றச்சாட்டு
சென்னையைப் பொறுத்தவரையில், ஜனவரி 23ஆம் தேதி தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழையாகவும், அவ்வப்போது மிதமான மழையாகவும், ஒரு சில இடங்களில் கனமழையாகவும் பதிவாகி வருகிறது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்படுகின்றன. வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது.
3 டிகிரி வரை குறையும் வெப்பநிலை:
வரக்கூடிய நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு சில இடங்களில் மட்டும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட குறைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மஹாராஷ்டிராவில் பேச வேண்டியதை மதுராந்தகத்தில் பேசலாமா? பிரதமரின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மரக்காணம் (விழுப்புரம்) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.