Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதிய கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்? தேர்தல் ஆணையத்திலும் பதிவு…கட்சியின் பெயர் என்ன தெரியுமா!

Panruti Ramachandran: ஓ. பன்னீர் செல்வத்தின் அரசியல் ஆலோசகராக இருந்து வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அவர் மீதான அதிருப்தியின் காரணமாக எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் புதிதாக கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

புதிய கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்? தேர்தல் ஆணையத்திலும் பதிவு…கட்சியின் பெயர் என்ன தெரியுமா!
புதிய கட்சி தொடங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 25 Jan 2026 09:13 AM IST

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் பரபரப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதில், ஒரு கட்சியை சேர்ந்த நபர் மற்றொரு கட்சிக்கு தாவுவதும், ஒரு கூட்டணியில் இருந்து மற்றொரு கூட்டணிக்கு கட்சிகள் மாறுவதும் என அரசியல் விளையாட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சரான பண்ருட்டி ராமச்சந்திரன் தனியாக கட்சி ஆரம்பித்துள்ளதாகவும், அந்த கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அந்த கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்தின் உரிமை மீட்பு கழகத்தில் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்து வந்தார். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் எந்த விதமான முடிவையும் எடுக்காமல் இருந்ததால், அதிருப்தி அடைந்து புதிய கட்சியை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

“எம். ஜி. ஆர். அதிமுக” என்னும் பெயரில் புதிய கட்சி

அதன்படி, பண்ருட்டி ராமச்சந்திரன் “எம். ஜி. ஆர். அதிமுக” என்னும் பெயரில் புதிய கட்சியை தொடங்கி தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஓ. பன்னீர் செல்வத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.  பண்ருட்டி ராமச்சந்திரன் இன்ஜினியராக இருந்து வந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக அரசியலுக்கு வந்தார்.

மேலும் படிக்க: என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை.. மொழிப்போர்த் தியாகிகள் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு..

யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்

இதைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் எம். ஜி. ஆர். உடன் இணைந்து கட்சி பணியாற்றி வந்தார். அப்போது, அமைச்சராகவும் பதவி வகித்தார். தொடர்ந்து, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதாவுடன் பயணித்து வந்தார். பின்னர், பாட்டாளி மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மக்கள் நல உரிமை கழகம்

இதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியில் இருந்து விலகி மக்கள் நல உரிமை கழகம் என்ற கட்சியை தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்தார். பின்னர், விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை தொடங்கியவுடன், அவருடன் இணைந்தார். அப்போது, சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக கூட்டணியை பண்ருட்டி ராமச்சந்திரன் முன் நின்று உருவாக்கினார். பின்னர், அந்தக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

ஓ.பன்னீர் செல்வம் ஆலோசகர்

இதனிடையே, அரசியலில் பெரிதளவில் ஈடுபடாமல் பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்து வந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கிய போது, அந்த குழுவில் அரசியல் ஆலோசராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். தற்போது, அதிருப்தியின் காரணமாக தனியாக கட்சி தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: திமுகவிடம் மக்கள் நீதி மய்யம் குறி வைக்கும் 15 தொகுதிகள்..லிஸ்ட் தயார் செய்த கமலஹாசன்..!