AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று கட்சி பெயரை அறிவிக்கும் சசிகலா? வேட்பாளர் பட்டியல் குறித்து முக்கிய ஆலோசனை..

Sasikala To Announce Party Name: சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கும், அல்லது 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக போட்டியிடுமா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன. வரவிருக்கும் தேர்தலில் சசிகலாவின் ஆதரவாளர்கள் களமிறங்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று கட்சி பெயரை அறிவிக்கும் சசிகலா? வேட்பாளர் பட்டியல் குறித்து முக்கிய ஆலோசனை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Mar 2026 08:55 AM IST

சென்னை, மார்ச் 13, 2026: சமீபத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள வி.கே. சசிகலா, மார்ச் 13, 2026 ஆகிய இன்று தனது கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தனது ஆதரவாளர்களுக்கு அவர் அவசர அழைப்பு விடுத்துள்ளதாகவும், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

புதிய கட்சியை தொடங்கிய சசிகலா:

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கமுதியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருந்தார். அப்போது கட்சிக்கான கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

மேலும் படிக்க: “234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி”.. மற்றவா்களை முதல்வராக மக்கள் ஏற்க மாட்டாா்கள்.. செங்கோட்டையன்

அந்தக் கொடியில் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், அதிமுகவின் அடையாளமாகக் கருதப்படும் சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கள் அந்தக் கொடியில் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கும், அல்லது 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக போட்டியிடுமா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன. வரவிருக்கும் தேர்தலில் சசிகலாவின் ஆதரவாளர்கள் களமிறங்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சி பெயரை அறிவிக்கும் சசிகலா:

இந்நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கு போயஸ் கார்டன் இல்லத்திற்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு “அம்மா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அம்மா அதிமுக)” என்ற பெயர் சூட்டப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்.. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…

வி.கே. சசிகலா பல ஆண்டுகளாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகவும் அரசியல் துணையாகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தரப்பில் சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும், சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்கும் வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெளிவாக தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து தான் சசிகலா புதிய கட்சியை தொடங்கும் முடிவை எடுத்துள்ளார்.

Follow Us