Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நான் அரசியலில் 62 வருடங்களாக இருக்கிறேன்.. கமலை போல் இப்போது வந்தவனா? – வைகோ கேள்வி..

Vaiko Pressmeet: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக அரசு மரபுகளின்படி செயல்பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகளாக எந்த மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டதோ, அதன்படியே திமுக செயல்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை வெளிச்சத்துக்கு காட்டி வருகிறது" என தெரிவித்துள்ளார்.

நான் அரசியலில் 62 வருடங்களாக இருக்கிறேன்.. கமலை போல் இப்போது வந்தவனா? – வைகோ கேள்வி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Jan 2026 07:22 AM IST

திருச்சி, ஜனவரி 25, 2026: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், “நான் அரசியலில் 62 ஆண்டுகளாக இருக்கிறேன். கமல்ஹாசனைப் போல இப்போது வந்தவன் அல்ல. இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பது அவருடைய விருப்பம். நேரம் வரும் போது நான் கேட்பேன்” எனத் தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஆளும் கட்சியான திமுக மீண்டும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பல்வேறு கட்சிகள் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்த சூழலில், திமுகவில் பலர் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் தனித்தனியாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்:

திமுகவைப் பொருத்தவரையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாமக ராமதாஸ் அணியும், தேமுதிகவும் விரைவில் இணையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: தைப்பூச திருவிழா…பழனிக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு..சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

என்.டி.ஏ கூட்டணி திமுக உடன் பந்தையத்திற்கு வர முடியாது – வைகோ:

இந்த சூழலில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக அரசு மரபுகளின்படி செயல்பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகளாக எந்த மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டதோ, அதன்படியே திமுக செயல்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை வெளிச்சத்துக்கு காட்டி வருகிறது. ஆனால் உண்மையில் அந்த கூட்டணி வலுப்பெறவில்லை. திமுகவைப் பொருத்தவரையில், கடந்த ஒரு மாதத்திலேயே நான்கு மாநாடுகளை நடத்தியுள்ளனர். வரக்கூடிய நாட்களில் மேலும் இரண்டு மாநாடுகள் நடைபெற இருக்கின்றன. திமுகவுடன் போட்டியிடும் அளவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி வர முடியாது” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க: 170 தொகுதிகளில் அதிமுக போட்டி?.. விறுவிறுக்கும் வேட்பாளர்கள் தேர்வு..

கமலை நான் பின்பற்ற வேண்டுமா?

மேலும் அவர், “தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் தொகுதி பங்கீடு குறித்து விரிவாக பேசப்படும். கமல்ஹாசன் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்கிறார் என்றால், அது அவருடைய இயல்பு. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், சரியான நேரத்தில் நான் கேட்பேன். அரசியலில் நான் 62 ஆண்டுகளாக இருக்கிறேன். கமல் போல இப்போதுதான் வந்தவன் அல்ல. அவர் இத்தனை தொகுதிகளை கேட்கிறார் என்றால், நானும் இப்போதே கேட்க முடியுமா? அவரை நான் பின்பற்ற வேண்டுமா?  இன்னும் அதற்கு நேரம் இருக்கிறது” எனக் கூறினார்.