வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? இன்றும் நாளையும் நடக்கும் சிறப்பு முகாம்..
SIR - Special Camp: ஜனவரி 18ஆம் தேதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பலரும் விண்ணப்பிக்காத நிலையில், இந்த கால அவகாசம் ஜனவரி 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதாவது, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜனவரி 24, 2026: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கிய இந்தப் பணிகள், டிசம்பர் மாதம் வரை நடைபெற்றன. இதன் முடிவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், ஐந்து கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.
SIR பணிகள்:
இந்தச் சூழலில் பலரும் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தரப்பில் பரப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்றும் நாளையும், அதாவது ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தரப்பில் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வரைவு வாக்காளர் பட்டியலில் உயிரிழந்தவர்கள், இரட்டை வாக்காளர் பதிவு இருந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக முகவரி மாற்றியவர்களின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் படிவம்–6 பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவ்வப்போது சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. கடைசியாக ஜனவரி 18ஆம் தேதி இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
மேலும் படிக்க: சென்னையில் இன்று முதல் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடக்கம்.. கட்டணம் மற்றும் வழித்தடம்.. முழு விவரம்..
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்:
தமிழகம் முழுவதிலும் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15.22 லட்சம் பேரும், பெயர் நீக்க 71,022 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஜனவரி 18ஆம் தேதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பலரும் விண்ணப்பிக்காத நிலையில், இந்த கால அவகாசம் ஜனவரி 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதாவது, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா…இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது!
அதேபோல், அடுத்த வாரம் வரக்கூடிய 24ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும், 479 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத நபர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதி உள்ள நபர்கள், படிவம்–6 மற்றும் உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 30ஆம் தேதி கால அவகாசம் முடிவடைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.