சென்னையில் இரு நாள்கள் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்…மாநகராட்சி அறிவிப்பு!
Voter List Revision Camp In Chennai: சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக இரண்டு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில், பல்வேறு கோரிக்கைகளை படிவங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம் .
தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தேர்தல் அறிவிப்பு முன்பாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் பிப்ரவரி இறுதிக்குள் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்வதற்காக சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னையிலும் 2 நாட்கள் வாக்காளர் திருத்த முகாம்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக வருகிற ஜனவரி 10, 11 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
ஜனவரி 18- ஆம் தேதி வரை அவகாசம்
தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த டிசம்பர் 19- ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாக்காளர்களிடம் திருத்தம் தொடர்பாக ஜனவரி 18- ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் தகுதியுடைய வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்க்கை விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்காக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் படிக்க: எஸ்.ஐ.ஆர். பணியில் திமுக இரட்டை வேடம்…எதிர்க் கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டு!
படிவம் 6- ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்
இந்த நிலையில், வருகிற ஜனவரி 10 ( சனிக்கிழமை), ஜனவரி 11 ( ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் சென்னையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட தகுதி உடைய வாக்காளர்கள் மற்றும் 18 வயதை பூர்த்தி செய்த இளம் வாக்காளர்கள் படிவம் 6- ஐ போட்டி செய்து உறுதிமொழி படிவத்துடன் முகாமில் சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை இணைத்துக் கொள்ளலாம்.
பெயர் நீக்கம்-முகவரி மாற்றத்துக்கு படிவம் 7-8
ஒரு சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்த ஒரு வாக்காளரும், முன்மொழிக்கப்பட்ட செயற்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவும் அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்க வேண்டும் என்றால் படிவம் 7- ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றுதல், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பிடுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை படிவம் 8- ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி…விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு?



