தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி…விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு?
Tamil Nadu Assembly Election Dates: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 10- ஆம் தேதி நிறைவடைகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்வதற்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி தமிழகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் பிப்ரவரி 7- ஆம் தேதி ( சனிக்கிழமை) வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்னர், இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்ட குழு தமிழ்நாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு
இதைத் தொடர்ந்து, மார்ச் மாதத்தில் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போதைய, சட்டப் பேரவையின் பதவி காலம் மே 10- ஆம் தேதி நிறைவடைய உள்ளது. எனவே, அதற்கு முன்பாக புதிய அரசு அமைய வேண்டும். எனவே, ஏப்ரல் மாதத்திலேயே தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இறுதி தேர்வு நடைபெறும்.
மேலும் படிக்க: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 + 1 தொகுதிகள் ஒதுக்கீடு? வெளியான தகவல்!!
மாணவ, மாணவிகளின் நலன் கருதி
இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி தேர்தல் தேதி அறிவிப்பதில் சற்று மாறுபாடு இருக்கும் என்றும் தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சிகள் பிரச்சாரம், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சிகள் பிரச்சாரம், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.
தேர்தல் தேதியை எதிர்பார்க்கும் கட்சிகள்
தற்போது, இந்த தேர்தல் தேதியே அரசியல் கட்சிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இருந்தாலும், அதிமுக பாஜக கூட்டணியில் கூட்டணி பேச்சு வார்த்தை, திமுகவில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை ஆகியவை தொடங்கியுள்ளது. ஆனால், இந்த பேச்சு வார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டாத நிலையில், இழுபறி நீடித்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாள் நெருங்கும் நிலையில், இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்டவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி-யை இணைக்க ஆலோசனை? இபிஎஸ் டெல்லி பயணம்..



