முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் டயர் வெடித்து விபத்து – பரபரப்பு தகவல்
CM Convoy Incident:: திண்டுக்கல்லில் அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதுரை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் திருமங்கலம் அருகே சென்ற போது திடீரென கார் டயர் வெடித்தது. இந்த சம்பவத்தில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
திண்டுக்கல், ஜனவரி 7 : திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) ரூ.1,595 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நிறைவு பெற்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இதனையடுத்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதுரை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் திருமங்கலம் அருகே சென்ற போது திடீரென கார் டயர் வெடித்தது. இந்த சம்பவத்தில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முதல்வர் பாதுகாப்பாக மதுரை சென்றடைந்தார். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் புதிய அரசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இரு சக்கர வாகனங்கள், விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் வழங்கினார்.
இதையும் படிக்க : எஸ்.ஐ.ஆர். பணியில் திமுக இரட்டை வேடம்…எதிர்க் கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டு!
முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் விபத்துக்குள்ளான காட்சிகள்
VIDEO | Madurai: Tamil Nadu Chief Minister MK Stalin’s car suffered a tyre burst while en route to the airport.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/RvE7K4pVNq
— Press Trust of India (@PTI_News) January 7, 2026
அமித் ஷா குறித்து கடும் விமர்சனம்
இதன் மூலம் ஒரே நாளில் மொத்தம் ரூ.20,387 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை விமர்சிக்க முடியாதவர்கள், இல்லாத பிரச்னைகளை உருவாக்கி அரசியல் லாபம் தேட முயல்கிறார்கள். சமீபத்தில் தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து குறிப்பிட்ட அவர், அவர் அமித் ஷாவா அல்லது அவதூறு ஷாவா?” என்று கேள்வி எழுப்பியதுடன், அவர் தவறான தகவல்களை தொடர்ந்து பரப்புவதாக விமர்சித்தார்.
இதையும் படிக்க : அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 + 1 தொகுதிகள் ஒதுக்கீடு? வெளியான தகவல்!!
மேலும், திமுக அரசு இந்து மத நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு உரிமைகளை முடிவுக்கு கொண்டு வருவதாக அமித் ஷா கூறியிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர், அவர் தமிழ்நாட்டின் நிலைமைகளை அறியாதவர் என கூறினார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 4,000-க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர் புரிந்துகொள்ளும் மொழியில் சொல்வதானால், கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் அவர் பேசினார்.



