Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக.. இபிஎஸ் அறிவிப்பு

AIADMK-PMK alliance: அதிமுக தரப்பில் மூத்த தலைவர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும், பாமக தரப்பில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோரும் உடன் உள்ளனர். முன்னதாக, கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 இடங்களில் போட்டியிட்ட பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக.. இபிஎஸ் அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் பாமக
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Jan 2026 10:44 AM IST

சென்னை, ஜனவரி 07: அதிமுக – பாஜக கூட்டணயில் பாமக இணைந்ததாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதோடு, தற்போது வரை அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாக கூறிய அவர், மேலும் சில கட்சிகள் விரைவில் தங்களது கூட்டணியில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தங்களது கழக தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்பிய வகையில் இந்த கூட்டணியை நாங்கள் அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார். அதேபோல், தொகுதிகளின் எண்ணிக்கை  பிறகு முடிவு செய்யப்படும் என்றும், விரைவில் அதுகுறித்து அறிவிப்போம் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிக்க: “திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல்”.. ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார்!!

இபிஎஸ் இல்லம் சென்ற அன்புமணி:

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புணி ராமதாஸ் இன்று காலையே நேரில் சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, அதிமுக தரப்பில் மூத்த தலைவர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும், பாமக தரப்பில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது, சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியுடன் இணைய பாமக விருப்பம் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இபிஎஸ் – அன்புமணி கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு:

இந்தப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிடும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து, பேசிய அன்புமணி ராமதாஸ், அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்தது மகிழ்ச்சியான தருணம் என்றார். தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் தாங்கள் இணைந்துள்ளதாக அவர் கூறினார்.

நைசாக நழுவிய அன்புமணி, இபிஎஸ்:

இதனிடையே, ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதா? என செய்தியாளர்கள் அன்புமணி, எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, இருவரும் கூட்டாக பதிலளிக்காமல் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்துக்கொண்டு அங்கிருந்து சைலண்டாக புறப்பட்டனர்.  இதன் மூலம், ராமதாஸின் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: ஜன.9ல் “உங்க கனவை சொல்லுங்க” புதிய திட்டம் தொடக்கம்.. அமைச்சர் அன்பில் மகேஷ்

அதாவது, அன்புமணி இடம்பெற்றுள்ள கூட்டணியில் ராமாதஸ் அணி நிச்சயம் இடம்பெறாது. அதேசமயம், திமுக அல்லது தவெக உடன் கூட்டணி அமைக்கும் முடிவை அவர் எடுப்பாரா போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அரசியல் விமர்சகர்கள் பலரும் ராமதாஸ் தவெகவுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, பாஜகவுடன் கூட்டணிய வைக்க அன்புமணியே விரும்புவதாக ராமதாஸ் வெளிப்படையாக விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 இடங்களில் போட்டியிட்ட பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.