“அதிமுக வேட்பாளராக போட்டியிட யாரையும் அணுகி ஏமாற வேண்டாம்”.. இபிஎஸ் எச்சரிக்கை!
Edappadi Palaniswami warning: வரும் ஜன.9ஆம் தேதி முதல் தலைமைக் கழகத்தில் வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்குகிறது. சரியான நபர்களை அடையாளம் கண்டு, ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து, இறுதியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். எனவே, போட்டியிடுவதற்கு வாய்ப்பு பெற்றுத்தருவோம் என்று யாரிடம் வேண்டியும் செல்ல வேண்டாம்.
சென்னை, ஜனவரி 07: 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு வருகிற 9ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நேர்காணல் நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணி முடிந்துள்ளது. அதன்படி, அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதில், 2,000க்கும் மேற்பட்டோர் தங்கள் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி களம் இறங்குமாறு கேட்டு விருப்ப மனு அளித்துள்ளர். இந்நிலையில், விருப்ப மனு அளித்தவர்களுடன் நேர்காணல் வருகிற 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக மாவட்ட வாரியாக ஒவ்வொரு நாளும் இத்தனை மாவட்டங்கள் என பிரிக்கப்பட்டு நேர்காணல் நடைபெற உள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் கூட்டணி மந்திரி சபை அமைய வாய்ப்பு….பிரேமலதா விஜயகாந்த்!
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், அதிமுக மீண்டும் ஆட்சியை அடைந்து மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் முழுமையான உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருவதையொட்டி, “என் தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன்” என்ற கோரிக்கையுடன் பெருமளவு நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தலைமை அலுவலகத்தில் தங்களது விருப்ப மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். தங்களது உற்சாகத்திற்கும் கட்சிக்கு காட்டிய நம்பிக்கைக்கும் நான் பொதுச்செயலாளர் என்ற வகையில் மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.
விருப்ப மனு அளித்தவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்:
வரும் ஜன.9ஆம் தேதி முதல் தலைமைக் கழகத்தில் வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்குகிறது. சரியான நபர்களை அடையாளம் கண்டு, ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து, இறுதியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். எனவே, போட்டியிடுவதற்கு வாய்ப்பு பெற்றுத்தருவோம் என்று யாரிடம் வேண்டியும் செல்ல வேண்டாம். யாரையும் நம்பி பணம், உதவி, பரிந்துரை போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். கட்சியின் பெயரை களங்கப்படுத்தும் நோக்குடன் சிலர் இத்தகைய கீழ்த்தர செயல்களில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அத்தகைய மோசடிகளுக்கு ஆளாகாமல் இருக்க விருப்பமனு தந்த நிர்வாகிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதையும் படிக்க: “திமுக செய்யும் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்”.. மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுரை!
உழைப்பவர்களுக்கு முன்னுரிமை:
கட்சிக்காக பாடுபடும், தர்மபுரியாக பணிபுரியும் அனைவரும் அரசாணைக்கு உரிய நேரத்தில் அங்கீகாரம் பெறுவார்கள். அதற்கான வாய்ப்பு யாரையும் அணுகுவதால் கிடைக்காது என்பதை மறவாதீர். மேலும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள், அசல் ரசீதை உடன் கொண்டு வந்தால் மட்டுமே நேர்காணலில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு, யாரேனும் மனு பெற்று அதை முறையாக ஒப்படைக்காமல் இருக்கிறார்கள் என்றால், உடனடியாக படிவத்தை பூர்த்திசெய்து தலைமைக் கழகத்தில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.