Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் கூட்டணி மந்திரி சபை அமைய வாய்ப்பு….பிரேமலதா விஜயகாந்த்!

Premalatha latest pressmeet about colation govt: 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மந்திரி சபை அமைய வாய்ப்பு உள்ளதாகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் அங்கம் வகிக்கும் கூட்டணி தான் நிச்சயமா ஆட்சி அமைக்கும் என்றும் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தமிழகத்தில் கூட்டணி மந்திரி சபை அமைய வாய்ப்பு….பிரேமலதா விஜயகாந்த்!
தமிழகத்தில் கூட்டணி மந்திரி சபை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 01 Jan 2026 15:55 PM IST

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தேவை என்று திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் போர்க் கொடி தூக்கி வருகின்றன. இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளரும் கூட்டணி மந்திரி சபை குறித்து பேசியுள்ளார். சென்னை கோயம்பேடு அருகே உள்ள விஜயகாந்த மண்டபத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூரில் வரும் ஜனவரி 9- ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம். அதிமுக- பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அழைக்கவில்லை.

அமித் ஷா நிகழ்ச்சிக்கு அழைப்பி விடுக்கவில்லை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்கான அழைப்பு விடுக்கவில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அரசு பேருந்துகளில் மாநிலத்தின் பெயர் உள்ளது. இதே போல, தமிழகத்திலும் அரசு பேருந்துகளில் தமிழகம் என்ற வார்த்தை இடம்பெற வேண்டும். இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்…முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் அட்ரா சிட்டி அதிகமாக உள்ளது

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா போதையில் உள்ள இளைஞர்கள் மற்றவர்களை அடிப்பது, மிரட்டுவது, கத்தியால் வெட்டுவது, போலீசாரை வெட்ட முயற்சிப்பது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவி வருகிறது. தமிழகத்தில் அட்ரா சிட்டி நிலவி வருகிறது. எனவே, தமிழகத்தில் கஞ்சா, டாஸ்மாக் உள்ளிட்டவற்றை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஒழிக்க வேண்டும்.

தமிழகத்தில் தொடர் போராட்டம்

இதே போல, சமூக நல பணியாளர்கள், மக்கள் நல பணியாளர்கள், செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அண்மை காலமாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தால் சென்னையை ஸ்தம்பித்துள்ளது. இவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்.

கூட்டணி மந்திரி சபை அமைய வாய்ப்பு

திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலம் நிறைவடைய உள்ள நிலையில், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற கோபம் அனைவரிடமும் உள்ளது. தமிழகம் இதுவரை காணாத தேர்தல் வெற்றி இந்த ஆண்டு அமையும். கூட்டணி மந்திரி சபை அமைய வாய்ப்புள்ளது. இந்த மாற்றம் தமிழக மக்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: பொங்கலுக்கு ரொக்க பணம் வழங்குவது உறுதி?கசிந்தது முக்கிய தகவல்!